தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Martyrs Day 2024: தியாகம் போற்றுவோம்’.. இன்று தேசிய தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது ஏன் தெரியுமா?

Martyrs Day 2024: தியாகம் போற்றுவோம்’.. இன்று தேசிய தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது ஏன் தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Jan 30, 2024, 05:20 AM IST

google News
மகாத்மா காந்தி மறைந்த தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தி மறைந்த தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி மறைந்த தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்திய தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மாலை 5:17 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டெல்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்சேவால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. அன்றைய தினமே இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் தியாகம் மற்றும் வீரம் பற்றிய வரலாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகவும் உத்வேகம் தரும் அத்தியாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை அறவழியில் முன்னெடுத்துச் சென்ற தலைவரான மகாத்மா காந்தியின் நினைவு நாளைக் குறிக்கும் வகையில், ஜனவரி 30 அன்று ஒவ்வொறு ஆண்டும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் வீர தீர செயல்களை இன்றைய தலைமுறைக்கு தெரிவிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த நாள் 1948 இல் காந்தியின் துயரமான படுகொலையை மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களையும் குறிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினத்தில், மகாத்மா காந்தியை மட்டுமல்ல, தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் இந்தியா நினைவு கூர்கிறது. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி, மலர்வளையம் வைத்து இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்துவர். இந்த தேசிய அனுசரிப்பு அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் அவர்கள் போராடிய மதிப்புகளின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக கருதப்படுகிறது. 

எனவே, இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட ஒவ்வொருவரின் தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி தேசிய தியாகிகள் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனுடன், நாட்டின் ஆயுதப் படைகளின் தியாகிகளுக்கும் இந்நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது. காந்தியின் நினைவாகவும், தியாகிகளின் பங்களிப்பிற்காகவும் நாடு முழுவதும் இரண்டு நிமிட இந்நாளில் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை