அம்பானி பழைய வீட்டில் யார் இருக்கா?.. 15,000 கோடி சொகுசு வீடு.. முகேஷ் அம்பானியின் ஆடம்பர குடியிருப்பு!
Dec 07, 2024, 07:30 AM IST
Mukesh Ambani: உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தனியார் குடியிருப்புகளில் ஒன்றாக திகழ்ந்து ஆண்டிலியா வீடு வருகிறது. 27 அடுக்குமாடிக்கொண்ட கட்டிடமாக அது திகழ்ந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் குடும்பமே அந்த அடுக்குமாடியில் தான் வசித்து வருகின்றனர்.
Mukesh Ambani: இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரும் உலக அளவில் பணக்காரப் பட்டியலில் இருக்கக்கூடியவர் தான் முகேஷ் அம்பானி. இந்தியாவின் மிகப்பெரிய தனித்துவமான அடையாளமாக முகேஷ் அம்பானி திகழ்ந்து வருகின்றார். மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கக்கூடிய முகேஷ் அம்பானி மிகவும் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தனியார் குடியிருப்புகளில் ஒன்றாக திகழ்ந்து ஆண்டிலியா வீடு வருகிறது. 27 அடுக்குமாடிக்கொண்ட கட்டிடமாக அது திகழ்ந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் குடும்பமே அந்த அடுக்குமாடியில் தான் வசித்து வருகின்றனர்.
ஆண்டிலியா
தெற்கு மும்பையின் மையத்தில் இந்த ஆண்டிலியா அமைந்துள்ளது. நான்கு லட்சம் சதுர அடி கொண்ட இடத்தில் இந்த 27 மாடு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டுவதற்காக 15,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களான ஷிர்ஸ் பெட்னர் அசோசியேட்ஸ் மற்றும் பெர்கின்ஸ் அண்ட் வில் ஆகிய நிறுவனங்கள் இந்த கட்டுமானத்தை முடித்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடல் இருக்கக்கூடிய தீவின் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வணிக மாநிலமாக திகழ்ந்து வரக்கூடிய மும்பையில் இதுதான் மிகப்பெரிய கட்டிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் மூன்று ஹெலிபேட்கள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் மிக வேகமாக செல்லக்கூடிய 9 லிப்ட்கள் உள்ளன. அதேபோல பல அடுக்குக் கொண்ட பார்க்கிங் அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
முகேஷ் அம்பானி குடும்பம் மட்டும் இந்த 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் 27-வது மாடியில் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி, இவர்களின் மகன் ஆகாஷ் அம்பானி மருமகள் ஸ்லோக மேத்தா மற்றும் இவர்களின் குழந்தைகள் பிரித்வி ஆகாஷ் அம்பானி, வேதா ஆகாஷ் அம்பானி ஆகியோர் வசித்து வருகின்றனர்.
தற்போது பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரும் இதே 27 ஆவது மாடியில் வசித்து வருகின்றனர். காற்றோட்டம் மற்றும் இயற்கை தேவைப்படுகின்ற காரணத்தினால் நீதா அம்பானி 27 வது மாடியில் தங்க விரும்பினார் எனக் கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் 27-வது மாடியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலியா கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேலை 2010 முடிக்கப்பட்டது.
முகேஷ் அம்பானி பழைய வீடு
இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுவதற்கு முன்பு முகேஷ் அம்பானி குடும்பம், தனது இளைய சகோதரர் அனில் அம்பானி மற்றும் அவரது தாயார் கோகிலாபென் அம்பானி ஆகியோரோடு மிகவும் அழகான வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பின்னர் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முகேஷ் அம்பானி குடும்பம் குடிபெயர்ந்தது.
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி தற்போது அதே பழைய வீட்டில் வசித்து வருகின்றார். முகேஷ் அம்பானி வசித்து வந்த பழைய வீடு 14 மாடுகள் கொண்ட வீடாகும். இந்த வீடு முகேஷ் மற்றும் அனில் அம்பானி ஆசியோரின் வீடாகும்.
டாபிக்ஸ்