November Bike Sales: விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஹீரோ!
Dec 03, 2022, 12:15 PM IST
பைக் நிறுவனங்களின் நவம்பர் மாத விற்பனையின் விவரங்கள் குறித்து இங்கே காண்போம்.
நவம்பர் மாதம் பைக் நிறுவனங்கள் விற்பனை செய்த பைக்குகளின் நிலவரங்கள் குறித்து இங்கே காண்போம். அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதம் குறைவான விற்பனையை அனைத்து நிறுவனங்களும் செய்துள்ளன. அதன் முழுமையான விவரங்கள் குறித்து இங்கே காண்போம்.
ஹோண்டா
இந்நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் நவம்பர் மாதம் 3,73,221 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளன. வெளிநாடுகளுக்கு 19, 681 வீடுகளை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் 16.9 விழுக்காடு குறைவான விற்பனையே ஹோண்டா நிறுவனம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நவம்பர் மாதம் 70,766 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் 5,006 யூனிட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 14 விழுக்காடு விற்பனையில் குறைந்துள்ளது.
பஜாஜ்
பஜாஜ் நிறுவனம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 விழுக்காடு விற்பனையில் குறைந்துள்ளது. இதுலயும் நிறுவனம் 3, 06, 552 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
சுசுகி
இந்நிறுவனம் நவம்பர் மாதம் 79,359 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. தாங்குகிறார். அதேபோல் இந்நிறுவனம் 16, 203 யூனிட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 விழுக்காடு இந்நிறுவனம் வளர்ச்சி பெற்று உள்ளது.
ஹீரோ
ஹீரோ நிறுவனம் நவம்பர் மாதம் 3,90,932 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபர் மாத விற்பனையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் 14 விழுக்காடு இந்நிறுவனம் விற்பனையில் குறைந்துள்ளது.
டிவிஎஸ்
அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் டிவிஎஸ் நிறுவனம் 2 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. நவம்பர் மாதம் டிவிஎஸ் நிறுவனம் 2,57,863 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மொத்தத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் மட்டும் 12 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளது.