தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Udham Singh: ஜாலியன் வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் சபதமும்

HBD Udham Singh: ஜாலியன் வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் சபதமும்

Manigandan K T HT Tamil

Dec 26, 2023, 05:45 AM IST

google News
இவர் 1899- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் எனும் கிராமத்தில் பிறந்தவர். (x)
இவர் 1899- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.

இவர் 1899- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.

உதம்சிங் ஓர் இந்திய புரட்சியாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமாவார். இவரது பிறந்த நாள் இன்று. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்திய Michael O'Dwyer-ஐ 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுட்டுக் கொன்றவர்.

உத்தம் சிங் பின்னர் விசாரணை செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜூலை 1940 இல் தூக்கிலிடப்பட்டார்.

இவர் 1899- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் எனும் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது. 1918 இல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜலியான்வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாகப் பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.

அவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920 இல் ஆப்பிரிக்காவிற்கும் 1921 இல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924 இல் இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927 இல் பகத் சிங் அழைத்ததால் இந்தியா திரும்பினார்.

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார். 1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். நேருஜி 1962-ல் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை