தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  75th Independence Day: சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

75th Independence Day: சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

Karthikeyan S HT Tamil

Aug 15, 2022, 10:51 AM IST

google News
புதுதில்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
புதுதில்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

புதுதில்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

75ஆவது சுதந்திர தினவிழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இல்லம்தோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75ஆவது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள், இந்திய சுதந்திரத்திற்கான சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. மிகப்பெரிய உயரங்களைக் குறிக்கும் வகையில் வானத்தில் பறக்கும் பட்டங்களுடன் அந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த நீதி என்னும் கலைஞர் கைவண்ணத்தில் இந்த டூடுல் GIF வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதி கூறுகையில், "நமது இனிமையான நினைவுகளில் ஒன்றான காற்றாடி பறக்கும் பழங்கால பாரம்பரியம் இந்திய சுதந்திர தின விழாக்களில் ஒருங்கிணைந்ததாக உள்ளது’ என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், "காற்றாடிகள் கலையின் வெளிப்பாடு ஆகும். அவை பல நவநாகரீக கருப்பொருள்கள் அல்லது சமூக செய்திகளைக் கொண்டுள்ளன. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், நமது தேசிய நிறங்களை, அன்பின் செய்தியை சித்தரிக்கும் வகையில் காற்றாடிகளை வரைந்துள்ளேன். அவை வானளாவிய உயர்ந்த கட்டிடங்கள், பறவைகள் போன்ற உயரத்தில் பறக்கின்றன." என்றார்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி