தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gandhi Jayanti 2023: காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை - வீடியோ

Gandhi Jayanti 2023: காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை - வீடியோ

Karthikeyan S HT Tamil

Oct 02, 2023, 09:16 AM IST

google News
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் 'காந்தி ஜெயந்தி' இன்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு,  தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பிரதமர் நரேந்திர மோடியும் காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் தாக்கம் "உலகளாவியமானது" , "ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்க முழு மனிதகுலத்தையும் ஊக்குவிக்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

“காந்தி ஜெயந்தியின் சிறப்பு நிகழ்வில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவரது காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். அவரது எண்ணங்கள் ஒவ்வொரு இளைஞனும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும், ”என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்காட்டில் மலர் தூவி மரியாதை செலுத்தினார், மகாத்மா காந்தி "ஒரு தனி நபர் மட்டுமல்ல, ஒரு யோசனை, ஒரு சித்தாந்தம் மற்றும் நமது மகத்தான தேசத்தின் தார்மீக திசைகாட்டி" என்று அவர் கூறினார்.

“சத்தியம், அகிம்சை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகவாழ்வு ஆகிய அவரது இலட்சியங்களுக்கு நித்திய மதிப்பு உண்டு. அவரது ஜெயந்தி அன்று காந்தியின் கொள்கைகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,: “காந்தி ஜெயந்தி அன்று, சுதந்திரத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மகாத்மாவுக்கு நாங்கள் ஒரு பில்லியன் அஞ்சலி செலுத்துகிறோம், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. நமது தேசத்தின் அடித்தளமான அமைதி, ஒற்றுமை மற்றும் அகிம்சை ஆகிய அவரது விழுமியங்கள் நமது வழிகாட்டி வெளிச்சமாக தொடர்ந்து செயல்படும் என்று உறுதிமொழி ஏற்போம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை அவர் போதித்த இந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை