G Square: ‘வலிமையான எங்களை அசைத்துப் பார்க்கும் முயற்சி’ ஜி ஸ்கொயர் விளக்கம்!
May 03, 2023, 08:35 PM IST
சிக்கல்களைக் கடந்து வரும் காலங்களில் சிறப்பாகச் செயல்படுவோம் என ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக ஜி ஸ்கொயர் நிறுவனம் விளங்கி வருகிறது. என் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிறுவனத்திற்கு முன்னதாக சிஎம்டிஏ சார்பில் வீடு கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்பட்ட வருவதாகப் புகார் எழுந்து வந்தது. மேலும் ஜீஸ்கயர் நிறுவனம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதே சமயம் இந்த நிறுவனத்துடன் திமுக முக்கிய நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை, கோயமுத்தூர், திருச்சி உள்படத் தென்னிந்திய முழுக்க இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த வருமானவரித் துறை சோதனைகள் பல கோடி ரூபாய் சிக்கியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் எனக் கூறி ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம் வருமானவரித்துறை சோதனை என்பது வழக்கமாக நடப்பது தான். இந்த சோதனைக்கு எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி உள்ளது. எங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கிடையாது. எங்கள் நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி நிகர வருமானம் இருப்பதாகக் கூறுவது என்பது அடிப்படையில் ஆதாரமற்றதாகும்.
அதேபோல் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை முற்றிலும் பொய்யான தகவலாகும். இந்த சோதனையில் ரொக்கமாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து சந்தேகம் இருப்பவர்கள் வருமானவரித்துறையினரிடம் உறுதி செய்து கொள்ளலாம் என ஏற்கனவே ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த ஜி ஸ்கொயர் சோதனை முடிவடைந்த நிலையில், இந்த நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அடித்தளம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து எங்களை விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. இந்த தேசத்தில் மிகவும் வலிமையாக இருக்கும் எங்கள் நிறுவனத்தை அசைத்துப் பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் இது.
இதுபோல பலவிதமான பிரச்சனைகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை நாங்கள் சமாளித்து இருக்கிறோம். இனிவரும் காலங்களிலும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களது தரமான சேவைகளை வழங்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து விதமான செயல்களையும் ஜி ஸ்கொயர் நிறுவனம் செய்து வருகிறது. வரும் காலங்களில் எங்களது நியாயமான தொழில் தொடரும். இது போன்ற பிரச்சனைகளை எப்பொழுதும் எங்களது நிறுவனம் கருத்தில் கொள்ளாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து வரும் எங்கள் நிறுவனங்கள் குறித்து ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்பினால் தாராளமாக எங்களது நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்