Puducherry: 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல்
Feb 22, 2023, 08:09 PM IST
புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிற பழைய முறைப்படி மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாமல், இடைக்கால பட்ஜெட்ட மட்டும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு வரும் நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11, 600 கோடி நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொகையான கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட ரூ. 1000 கோடி அதிகமாக உள்ளது.
இதைத்தொடர்ந்து வரும் மார்ச் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றுகிறார். சட்டப்பேரவை செயலாளர் தயாளன், ஆளுநர் தமிழிசையின் ஒப்புதலுடன் பட்ஜெட் தாக்கல் ஆகும் தேதியை அறிவிக்கிறார்.
டாபிக்ஸ்