தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Gopal Krishna Gokhale: குறிக்கோள்களை அடைய கோகலே பின்பற்றிய 2 முக்கிய கொள்கைகள்!

HBD Gopal Krishna Gokhale: குறிக்கோள்களை அடைய கோகலே பின்பற்றிய 2 முக்கிய கொள்கைகள்!

Manigandan K T HT Tamil

May 09, 2023, 06:10 AM IST

google News
Gopal Krishna Gokhale: கோபால கிருஷ்ண கோகலே, பிரிட்டன் அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார்.
Gopal Krishna Gokhale: கோபால கிருஷ்ண கோகலே, பிரிட்டன் அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார்.

Gopal Krishna Gokhale: கோபால கிருஷ்ண கோகலே, பிரிட்டன் அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார்.

கோபால கிருஷ்ண கோகலே ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

கோகலே, இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்திய பணியாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் ஆவார்.

பிறப்பு

1866ஆம் ஆண்டு மே 9ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவான பாம்பே நகரில் பிறந்தார் கோபால கிருஷ்ண கோகலே. இவர், சித்பவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கல்வி

குடும்பம் ஏழையாக இருந்தாலும் இவருக்கு ஆங்கிலக் கல்வியை இவரது குடும்பம் கிடைக்கச் செய்தது. இதன்காரணமாக அவர் கிளெர்க் வேலைக்கு சேர்ந்தார்.

கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தான் அவர் படித்தார்.

1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் கோகலே உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நவுரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அன்னி பெசன்ட் ஆகியோர் இவரது காலத்தில் வாழ்ந்த ஆகச் சிறந்த அரசியல் தலைவர்கள் ஆவர்.

கோபால கிருஷ்ண கோகலே, பிரிட்டன் அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார்.

தனது குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அவை வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகியவை ஆகும்.

அரசியல்

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்.

காந்திஜியின் ஆலோசகர்

மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான ஆலோசகராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளைப் பெற்றார்.

கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்.

1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி கோகலே, 49வது வயதில் காலமானார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை