தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Jharkhand Witchcraft: ஜார்க்கண்டில் 4 பேர் வாயில் மலத்தை திணித்த கிராமவாசிகள்!

Jharkhand Witchcraft: ஜார்க்கண்டில் 4 பேர் வாயில் மலத்தை திணித்த கிராமவாசிகள்!

Divya Sekar HT Tamil

Sep 28, 2022, 11:17 AM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்களை மலத்தை உண்ண வைத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்களை மலத்தை உண்ண வைத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்களை மலத்தை உண்ண வைத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.

ஜார்க்கண்ட் : தும்கா மாவட்டத்தில் உள்ள சரையாஹக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்வரி கிராமத்தில் மாந்திரீகம், சூனியம் செய்ததாக குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் கிரமவாசிகள் தாக்கியுள்ளனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

அதோடு மட்டும் இல்லாமல் அவர்கள் மனித மலத்தை ஒரு பாட்டிலில் நிரப்பி, அதை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் வாயில் சிறுநீரை ஊற்றியும் கொடுமைபடுத்தியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சரையாஹத் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இருவரின் நிலைமை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக தியோகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்யதுள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நடந்திருப்பதாகவும் போலீசாரின் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே வந்ததாகவும் தெரிகிறது. கைதானவர்களிடம் மேற்கொண்டவிசாரணையில் "தாக்குதலுக்கு ஆளானவர்கள் தங்களது குழந்தையை நோய்வாய்ப்படச் செய்ததார்கள்" எனக் கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே சம்பவம் நடந்த அஸ்வரி கிராமத்தில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்