தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  எளிமையாக வாழ்ந்து மறைந்த முதல் முதலமைச்சர் இ.எம்.எஸ் நினைவு நாள் இன்று!

எளிமையாக வாழ்ந்து மறைந்த முதல் முதலமைச்சர் இ.எம்.எஸ் நினைவு நாள் இன்று!

Karthikeyan S HT Tamil

Mar 19, 2023, 06:25 AM IST

google News
E.M.S. Namboodiripad: கேரள முன்னாள் முதல்வருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiripad) நினைவு தினம் இன்று (மார்ச் 19). (CPI(M))
E.M.S. Namboodiripad: கேரள முன்னாள் முதல்வருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiripad) நினைவு தினம் இன்று (மார்ச் 19).

E.M.S. Namboodiripad: கேரள முன்னாள் முதல்வருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiripad) நினைவு தினம் இன்று (மார்ச் 19).

அனைவராலும் இ.எம்.எஸ் என அன்போடு அழைக்கப்பட்ட பிரபல பொதுவுடைமைத் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தனது சிந்தனை, செயல் இரண்டையும், கேரளாவின் ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களுக்காகவே அமைத்துக் கொண்டார். எளிமையாக வாழ்ந்து மறைந்த இ.எம்.எஸின் நினைவு நாளான இன்று (மார்ச் 19) அவரை போற்றுவோம்.

  • கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏலங்குளம் கிராமத்தில் 1909 ஜூன் 13 ஆம் தேதி பிறந்தார். ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிதிரிபாட் என்பது முழுப்பெயர். சாதி, பழமைவாதங்களுக்கு எதிராக இளம் வயதிலேயே போராடினார். முற்போக்கு இளைஞர்கள் அமைப்பான வள்ளுவநாடு யோகஷேம சபையில் இணைந்து செயல்பட்டார்.
  • கல்லூரி நாட்களில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய விடுதலை இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
  • 1934-ல் காங்கிரஸ் கட்சியில் ஓர் அங்கமாக சோஷலிச காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர்களில் இவர் முக்கியமானவர். அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக 1934 முதல் 1940 வரை இருந்தார்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் உடைமைகளை விற்று, கட்சிக்காக செலவிட்டார். தொழிலாளர்களின் தத்துப் பிள்ளை என அழைக்கப்பட்டார்.
  • 1950-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரானார். 1957 தேர்தலில் வென்று கேரள முதல்வரானார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
  • உலக வரலாற்றிலேயே பொதுவுடைமைத் தலைவர் ஒருவர், மக்களாட்சித் தேர்தல் மூலம் மாநில முதல்வராகப் பதவி ஏற்றதும் இதுவே முதல் முறை.
  • இ.எம்.எஸ். ஆட்சிக் காலத்தில் கல்வி, நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தனது சிந்தனை, செயல் இரண்டையும், கேரளாவின் ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களுக்காகவே அமைத்துக் கொண்டார். புதிய கேரளாவைப் படைத்தவர்.
  • மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரள மாநிலம் உருவானதில் முக்கியப் பங்காற்றினார்.
  • இரண்டாவது முறையாக 1967-ல் முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது கடமையை சிறப்பாகச் செய்தார்.
  • இ.எம்.எஸ் ஸின் பண்பாட்டு பங்களிப்பும் முக்கியமானது. ஆங்கிலம், மலையாளம் இரண்டிலுமே எழுதும் திறன் பெற்றிருந்தார். நில உரிமை, சமூகம், அரசியல், கேரள மாநிலம், வரலாறு, மார்க்ஸியம், தத்துவம் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார்.

எளிமையாக வாழ்ந்தவர். சுமார் 70 ஆண்டுகாலம் பொது வாழ்வில் ஈடுபட்டவர். நேர்மையான அரசியல்வாதியாகவும், முன்னுதாரணத் தலைவராகவும் விளங்கிய இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தனது 89-வது வயதில் (1998 ஆம் ஆண்டு இதே நாளில் (மார்ச் 19) மறைந்தார்.

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் வாழும் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நினைவுநாளில் அவரை நினைவு கூர்வோம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி