Katchatheevu row: சூடு பிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்..காரசாரமாக விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
Apr 01, 2024, 11:32 AM IST
கச்சத்தீவு தீவு விவகாரத்தில் திமுகவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்த சிறிது நேரத்திலேயே ஜெய்சங்கரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Katchatheevu Island issue: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "கச்சத்தீவு விவகாரம் திடீரென எழுந்து வரவில்லை; இது நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதிக்கப்படும் நேரடி பிரச்னை... கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.
இவ் விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் தங்களுக்கு எந்த பொறும்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்." என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், கச்சத்தீவு விவகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் அடிக்கடி கடிதப் போக்குவரத்தின் விஷயமாக இருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்னை எப்படி உருவானது என்பது பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும்.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் 1974 ஆம் ஆண்டில் இந்தியா - இலங்கை கடல் எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை "சிறிய தீவு" மற்றும் "சிறிய பாறை" என்று அழைத்தனர்.
மே 1961 இல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த ஒரு அறிக்கையில், "இந்த சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை, அதன் மீதான எங்கள் உரிமையை விட்டுக்கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. இதுபோன்ற விவகாரங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதையும், பாராளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுவதையும் நான் விரும்பவில்லை." எனவே, நேருவைப் பொறுத்தவரை, இது ஒரு சிறிய தீவு. இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை, அவர் அதை ஒரு தொல்லையாகப் பார்த்தார்... அவரைப் பொறுத்தவரை, நீங்கள் எவ்வளவு சீக்கிரம் அதை விட்டுக்கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது என்று நேரு கூறியிருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.." இந்த பார்வை இந்திரா காந்தியிடமும் தொடர்ந்ததாகவும் ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்களும், 1,175 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசுதான் இந்திய மீனவர்களை விடுவிப்பதை உறுதி செய்ய செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும். இலங்கை அரசுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கச்சத்தீவு பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு, பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில், "கச்சத்தீவை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்த விவகாரத்தில் வெளிவந்துள்ள புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை முற்றிலுமாக அம்பலப்படுத்தியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட பதிலை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊடக செய்தி அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்