தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!

மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!

Kathiravan V HT Tamil

Nov 20, 2024, 07:08 PM IST

google News
மகாராஷ்டிராவில் ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன. (HT_PRINT)
மகாராஷ்டிராவில் ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன.

மகாராஷ்டிராவில் ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. .

பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி பாஜக தலைமையிலான கூட்டணி 175 முதல் 195 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் தலைமையிலான எம்விஏ 85 முதல் 112 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7-12 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பிஜேபி-சிவசேனா-என்சிபி கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று  மேட்ரைஸ் கணித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக 150 முதல் 170 இடங்களை கைப்பற்றும் என அதில் கூறப்பட்டு உள்ளது. 

காங்கிரஸ்-சிவசேனா (யுபிடி)-என்சிபி (எஸ்சிபி) கூட்டணி 110 முதல் 130 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், ஒருங்கிணைந்த சிவசேனா கட்சி 56 இடங்களிலும், ஒருங்கிணைந்த என்சிபி 54 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 

சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளில் பிளவு நடந்த பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.

ஜார்க்கண்ட் தேர்தல் நிலவும்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

81 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42 முதல் 53 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மேட்ரைஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியா கூட்டணிக்கு 25 முதல் 30 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பீப்பிள்ஸ் பல்ஸ் அமைப்பின் கருத்து கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 44-53 இடங்களும், இந்திய அணிக்கு 25-37 இடங்களும் மற்றவர்களுக்கு 5-9 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை