Exit polls 2023: 5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு? இன்று மாலை வெளியாகிறது கருத்து கணிப்பு முடிவுகள்!
Jan 06, 2024, 04:08 PM IST
“Assembly Elections 2023:தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் இன்று மாலை 6.30 மணி முதல் தெரிந்து கொள்ளலாம்”
தெலுங்கானா சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி உடன் நிறைவடைய உள்ள நிலையில், 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணி முதல் வெளியாக உள்ளது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிசோரம் , மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முறையே நவம்பர் 7, நவம்பர் 17 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.தெலங்கானாவில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுவது தொடர்பாக நவம்பர் 7ஆம் தேதி காலை 7:00 மணி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 6:30 மணி வரை, தேர்தல் ஆணையம் கடந்த மாதம் கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணி உடன் இந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட ஊடகங்கள் மற்றும் தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது வாக்காளர்கள் அந்தந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த உடனேயே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு ஆகும். அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களுக்கான ஆதரவை மதிப்பிடுவதற்கு இந்த கருத்து கணிப்பு உதவுகிறது.
வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களுக்கான வாக்குகளும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் இன்று மாலை 6.30 மணி முதல் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்