திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் - கருத்து கணிப்பு முடிவுகள் எப்போது?
Feb 27, 2023, 01:57 PM IST
Assembly Elections 2023: மேகாலயா, நாகாலாந்த், திரிபுராவின் வாக்குகள் எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும். கருத்துகணிப்பு முடிவுகள் இன்று இரவு 7 மணிக்கு பின்னர் வெளியிடப்படும். அவற்றை எதில் பார்க்கலாம் என்ற விவரம் உள்ளே உள்ளது.
மேகாலயா மற்றும் நாகாலாந்தில் வாக்குப்பதிவு, கடும் பாதுப்புடன் இன்று காலை முதல் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன் சோதனை வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தின் தலைநகர் ஷில்லாங் மற்றும் கோஹிமாவில் வாக்காளர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். வாக்குப்பதிவு 4 மணிக்க முடிவடையும். இந்த இரு மாநிலங்கள் மற்றும் திரபுரா ஆகிய மூன்று மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும்.
திரிபுராவின் 60 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்றது.
இன்று நடைபெறும் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். இரு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. இரு மாநிலத்திலும் 60 தொகுதிகள் உள்ளது. நாகாலாந்தில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் ஒரு வேட்பாளர் இறந்ததையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் 13 லட்சம் வாக்காளர்கள், 139 வேட்பாளர்கள், 59 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசிட்டோ கினிமி அகுலுட்டோ தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அங்கு தேர்தல் இல்லை.
மேகாலயாவிலும் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஷோஹியோங் தொகுதி வேட்பாளர் இறந்ததையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திரிபுராவில் 21 பேர் 18 வன்முறைகளில் ஈடுபட்டதாக தேர்தல் முடிந்த இரண்டு நாளில் கைது செய்யப்பட்டார்கள். திரிபுராவில் 89.95 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேகாலயாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளி இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி தடை விதித்தது. மேலும் சனிக்கிழமை 4 மணிக்கு பின்னர் பிரச்சாரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி கிரண் கிட்டே கூறுகையில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஆகியவற்றிற்கு இன்று இரவு 7 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அச்சு ஊடகத்தினர் மட்டும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விளம்பரங்கள் வெளியிடலாம் என தெரிவித்திருந்தார்.
கருத்து கணிப்புகளை எதில் பார்க்கலாம்?
திரிபுரா, நாகாலாந்து, மேகலாயா ஆகிய சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் செய்துள்ளன. அவை இன்று இரவு 7 மணிக்கு பின்னர் வெளியிடப்படும். P-MARQ, ETG, BARC, MATRIZE, Jan Ki Baat, Axis My India, Today's Chanakya, TV9, C-Voter ஆகிய நிறுவனங்கள் இன்று இரவு 7 மணிக்கு பின்னர் தங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்