Election results 2022:குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக! இமாச்சலில் காங்கிரஸ்
Dec 08, 2022, 04:13 PM IST
குஜராத்தில் ஆட்சியை பாஜக தொடந்த ஏழாவது முறையாக தக்கவைத்துள்ளது. அதேபோல் இமச்சால பிரதேசத்தில் ஆட்சி இழந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பை பெறுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 12ஆம் இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் உள்ள மொத்தம் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இந்த இருமாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளிலும், குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய நிலையில், வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.
இமாச்சலில் பாஜக - காங்கிரஸ் இடையேயும், குஜராத்தில் பாஜக - கங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டியும் நிலவியது.
கடந்த 1995 முதல் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தொடர்ச்சியாக 7வது முறையாக ஆட்சியை இந்த முறையும் தக்கவைத்துள்ளது. தற்போதையை நிலவரப்படி பாஜக 156 தொகுதிகளில் முன்னிலை பெற்று மிகப் பெரிய பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஆட்சியில் இருந்து வரும் பாஜக 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 36 இடங்களில் முன்னிலை பெற்ற பெரும்பான்மைக்கு தேவையான இடத்தை பிடித்துள்ளது. மூன்று இடங்ளை
மற்ற கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.
இமாச்சல பிரதேச தேர்தலிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, ஒரு இடங்களிலும் முன்னிலை பெறவில்லை.