Telangana Assembly Election 2023: யாரெல்லாம் வீட்டில் இருந்தே வாக்களித்தனர்?
Nov 30, 2023, 10:06 AM IST
தெலங்கானா தேர்தலையொட்டி ‘ஹோம் ஓட்டிங்’ எனும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி இருந்தது.
தெலங்கானா தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகளில் ஒன்றான முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று (நவ.30) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
தெலங்கானா தேர்தலை முன்னிட்டு முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வாக்காளர்களுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, தெலங்கானாவில் பல்வேறு இடங்களில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வைத்தனர்.
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழன் வரை சுமார் 27,600 வாக்காளர்கள் இந்த சேவையைப் பெற்றுள்ளனர். சுமார் 1,000 இதர வாக்காளர்களும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் ஓட்டு முறைக்கு பதிவு செய்துள்ளனர்.
3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் 221 பெண்கள், 1 திருநங்கை உட்பட 109 தேசிய மற்றும் மாநில கட்சிகளைச் சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக மொத்தம் 35,655 வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் சிறு சிறு கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. மாவோயிஸ்ட்களின் நடமாட்டமும் சில தொகுதிகளில் உள்ளதால் தெலங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்