Srilanka Election: இலங்கை உள்ளாட்சித் தேர்தல் - தேதி அறிவித்த தேர்தல் ஆணையம்
Jan 21, 2023, 11:49 PM IST
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல் ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் நடத்த வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடியை அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருச்சியை காட்டுவதற்கு இந்த தேர்தலில் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை முழுவதும் உள்ள 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதே சமயம் தேர்தலுக்காக ரூபாய் 10 பில்லியன் செலவாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இலங்கை அரசு நிதி நெருக்கடியில் இருக்கின்ற காரணத்தினால் தேர்தலில் செலவு அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இலங்கையில் 2018 ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு தொடர்ந்து பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடையே இந்த கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது.
பொது மக்களின் எழுச்சி காரணமாக முன்னாள் அதிபரும், கட்சியின் தலைவருமான கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தற்போது இந்த தேர்தலில் ஆளுங்கட்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த முறை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி கட்சி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
டாபிக்ஸ்