EC suspends Telangana DGP: தெலங்கானா காவல் துறை டிஜிபி இடைநீக்கம்.. தேர்தல் ஆணையம் அதிரடி! காரணம் என்ன?
Dec 03, 2023, 05:44 PM IST
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அக்கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தெலங்கானா காவல்துறை இயக்குநர் அஞ்சனி குமாரை இந்திய தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.
முன்னதாக, தெலங்கானா மாநில காவல்துறை நோடல் அதிகாரி சஞ்சய் ஜெயின் மற்றும் நோடல் அதிகாரி (செலவினம்) மகேஷ் பகவத் ஆகியோருடன் தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குனர் அஞ்சனி குமார், ஹைதராபாத்தில் தெலங்கானா சட்டப் பேரவைக்கு நடந்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ரேவந்த் ரெட்டியை மலர் கொத்துடன் சந்தித்தனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையே, தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி. தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி என அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்
இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் வருவோம் எனவும், ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகர் பவன் கல்யாணின், ஜன சேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 60 தொகுதி வெற்றிபெற்றால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். இந்நிலையில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாரத் ராஷ்டிரிய சமிதி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 9 தொகுதிகளில் முதன்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் பொதுவெளியில் தோன்றி தனது கட்சித்தொண்டர்களுக்கு, காங்கிரஸ் முன்னிலை வகிப்பதற்கு உழைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்