தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Election Commission: 'தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்'-தேர்தல் ஆணையம்

Election Commission: 'தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்'-தேர்தல் ஆணையம்

Manigandan K T HT Tamil

Nov 20, 2023, 04:54 PM IST

google News
2018 சட்டமன்றத் தேர்தலில் செய்யப்பட்ட பறிமுதல்களை விஞ்சும் வகையில், ஐந்து மாநிலங்களில் 1760 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. (HT_PRINT)
2018 சட்டமன்றத் தேர்தலில் செய்யப்பட்ட பறிமுதல்களை விஞ்சும் வகையில், ஐந்து மாநிலங்களில் 1760 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2018 சட்டமன்றத் தேர்தலில் செய்யப்பட்ட பறிமுதல்களை விஞ்சும் வகையில், ஐந்து மாநிலங்களில் 1760 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2018 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் 1760 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்துள்ளது.

மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையான இலவசங்கள் மற்றும் போதைப்பொருள், பணம், மதுபானம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அடங்கும்.

“தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐந்து மாநிலங்களில் ரூ.1760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இது 2018ல் இந்த மாநிலங்களில் நடந்த முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் ரூ. 239.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 

குஜராத், இமாசலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற கடந்த 6 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ரூ.1400 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இது இந்த மாநிலங்களில் முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் 11 முறை" என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தானிலும், நவம்பர் 30-ம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் ஆணையம் பகிர்ந்த விவரங்களின்படி, மொத்தம் ரூ.659.2 கோடியுடன் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ரூ.650ல் உள்ளது.

5 மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் விவரம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை