தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Iran Earthquake: ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 பேர் பலி

Iran Earthquake: ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 பேர் பலி

Aarthi V HT Tamil

Jan 29, 2023, 07:48 AM IST

google News
ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியை ஒட்டிய ஈரானின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்தனர். 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கோய் நகரம் ஆகும். இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 440 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையுடன் பனியும் அதிகமாக பெய்து வருகிறது. இதனால், நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் கூறுகையில், ”ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி எல்லைக்கு அருகில் வடமேற்கு ஈரானின் அஜர்பைஜான் மாகாணத்தில் சனிக்கிழமையன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 440 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன” என்றனர்.

விஞ்ஞானிகள் கூறுகையில், ”பூமியின் மேல் மேற்பரப்பு 7 டெக்டோனிக் தகடுகளால் ஆனது, இந்த தட்டுகள் ஒன்றையொன்று நோக்கி நகரும் போது, ​​​​அவை மோதி பூகம்பத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நாடு சமீபத்திய ஆண்டுகளில் பல பேரழிவு தரும் பூகம்பங்களை எதிர்கொண்டது” என்றனர்.

உலகில் நிலநடுக்கங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக.. நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் நிலைமை மோசமாக உள்ளது. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி