Russia: அதிபர் புதினை கொல்ல வந்த ட்ரோன்...!
May 03, 2023, 10:36 PM IST
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய நடத்தப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து ஓராண்டிற்கு மேல் நடந்து வருகின்றனர். தற்போது உக்ரைன் மீது ரஷ்ய நாடு போர் தொடுக்கத் தொடங்கி 430 நாட்கள் கடந்து விட்டன. இந்த போரால் மிக அதிகமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
அதேசமயம் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த போரின் காரணமாக பல்வேறு முக்கிய இடங்களை உக்ரைனில் ரஷ்ய நாடு கைப்பற்றி உள்ளது. பொருட்சேதங்கள் உயிர்ச் சேதங்கள் என உக்கிரன் ஸ்தம்பித்துப் போனது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளினை குறி வைத்து நேற்று இரவு ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், " அதிபர் மாளிகை மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அந்த இரண்டு ட்ரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டன. இந்த சம்பவத்தில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்ட நேரத்தில் ரஷ்ய அதிபர் புதின் அதிபர் மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஓடின்ஸ் ஒஸ்கோவை மாவட்டத்தில் தனது பங்களாவான நொவோ ஒய்வாவில் தங்கி இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசுதான் காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் முயற்சி ஆனது உக்ரைன் அரசால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாகும். இதற்கு ரஷ்ய அரசு தக்க பதிலடி கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்