தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Baby Delivery: பனிப்பொழிவு; வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் நடந்த பிரசவம்

Baby Delivery: பனிப்பொழிவு; வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் நடந்த பிரசவம்

Aarthi V HT Tamil

Feb 13, 2023, 08:04 AM IST

google News
Child Delivery through WhatsApp call: வாட்ஸ்அப் அழைப்பில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவர்கள் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு  ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு வாட்ஸ் அப் உதவியுடன் பிரசவம் நடந்தது. 

பனிப்பொழிவு காரணமாக விமானம் ஏற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தொலைதூரப் பகுதியில் பிரசவ சிக்கல்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ஆரோக்கியமான குழந்தையை உலகிற்கு அழைந்து வந்து உள்ளனர்.

கிரால்போரா பிளாக் மருத்துவ அதிகாரி டாக்டர் மிர் முகமது ஷாஃபி கூறுகையில், "வெள்ளிக்கிழமை இரவு, எக்லாம்ப்சியா, நீடித்த பிரசவம் மற்றும் எபிசியோடமி மூலம் சிக்கலான பிரசவம் போன்ற வரலாறு கொண்ட கெரான் PHC (ஆரம்ப சுகாதார நிலையம்) யில் பிரசவ வலியுடன் ஒரு நோயாளியை பார்த்தோம்.

குளிர்காலத்தில் குப்வாரா மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வாகனங்கள் வர துண்டிக்கப்பட்டு இருந்த காரணத்தினால், நோயாளியை மகப்பேறு வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர்களுக்கு நான் வீடியோ கால் மூலம் சிகிச்சை நடைமுறைகளை விளக்கினேன். 

ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டது அனைவர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி