தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi High Court:இளம் பெண்ணின் 33 வார கருவை கலைக்க கோரிக்கை! நீதிமன்றம் அனுமதி

Delhi high court:இளம் பெண்ணின் 33 வார கருவை கலைக்க கோரிக்கை! நீதிமன்றம் அனுமதி

Dec 06, 2022, 11:02 PM IST

இளம் பெண்ணின் 33 வார கருவை கலைக்க, தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைப்பதற்கு மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும், பெண்ணின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம் பெண்ணின் 33 வார கருவை கலைக்க, தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைப்பதற்கு மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும், பெண்ணின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இளம் பெண்ணின் 33 வார கருவை கலைக்க, தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைப்பதற்கு மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும், பெண்ணின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

26 வயது இளம் பெண்ணின் கருவில் உள்ள சில அசாதாரணங்கள் காரணமாக தனது 33 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது, இதுபோன்ற விசித்திரமான வழக்குகளில் இறுதி முடிவு தாயின் விருப்பத்தையும் பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான சாத்தியத்தையும் அங்கீகரிக்க உறுதி செய்ய வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

அந்த வகையில் மேற்கூறிய இந்த இரண்டு காரணங்களையும் மனதில் வைத்து, தாயின் தேர்வு முற்றிலும் நேர்மையான முறையில் செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கருதுகிறது.

மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஒரு கண்ணியமான மற்றும் தன்னிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பு பிறக்காத குழந்தைக்கு உள்ளன. எனவே இந்த வழக்கில் மருத்துவ ரீதியாக நிறுத்த முடிவு எடுப்பது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை தெரிவிப்பத்கு முன்னர் வழக்கு தொடர்ந்த பெண்ணிடம் உரையாடிய நீதிபதி பிரதீபா எம் சிங், தனது உடலில் ஏற்படும் அபாயங்களை நன்கு அறிந்த பின்பே இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என நம்புவதாக தெரிவித்தார்.

அசாதாரண கோளாறுகள் இருப்பதன் காரணமாக, தனது 33 வார கரு வளர்ச்சியை மருத்துவ ரீதியாக நிறுத்தக் கோரி, பெண் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பேறுகால மருத்துவ முடிவு (MTP) சட்டத்தின்படி, 24 வாரங்கள் வரை மட்டுமே கருவை கலைக்க மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும் மூளை தொடர்பான அசாதாரண நிலை கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பது அறிந்து கொள்ளப்பட்டதால் அதை கலைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் பெண்ணின் விருப்பத்துக்கு ஏற்பவும், மருத்துவ காரணங்களை உறுதி செய்த பின்னரும் நீதிமன்றம் கருகலைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.