Womens Day Gift: மகளிர் தினம் பரிசாக 6 முக்கிய தீர்மானங்கள் - மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல்
Mar 08, 2024, 07:55 AM IST
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆறு முக்கிய தீர்மானங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவை அனைத்து மகளிர் தின பரிசாக பெண்களுக்கு அமையும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் (PMUY) பயனாளிகளுக்கு, 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ. 300 என்ற இலக்கு மானியத்தை ஆண்டுக்கு 12 மறு நிரப்பல்களுக்கு தொடர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏப்ரல் 1, 2024 இல் தொடங்கி மார்ச் 31, 2025 வரை பயனாளிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். "இதற்கான மொத்தச் செலவு ரூ. 12 ஆயிரம் கோடி ஆகும்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியையும் 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய விகிதம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 46 சதவீதத்தை விட கூடுதலாக 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 10,371.92 கோடி செலவில் விரிவான தேசிய அளவிலான 'இந்திய AI மிஷன்' திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல், மற்றும் இந்தியாவுக்கான AI தொடர்பான வேலைகளை மேம்படுத்தும் வகையில் இந்திய AI மிஷன் பணி செயல்படும்
2024-25 ஆம் ஆண்டுக்கான மூல சணல் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ. 285 உயர்த்தி ரூ. 5,335 ஆக அரசாங்கம் உயர்த்தியது. "இது அகில இந்திய அளவில் சராசரி உற்பத்தி செலவை விட 64.8 சதவீதம் வருமானத்தை உறுதி செய்யும்.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 34 புதிய ALH துருவ் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர்களில் 25 இந்திய ராணுவத்துக்கும், ஒன்பது ஹெலிகாப்டர்களை இந்திய கடலோர காவல்படையிலும் இணைக்கப்படவுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மூலம் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படுகிறது.
வடகிழக்கு பகுதிகளில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க ரூ. 10,037 கோடி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. "முன்மொழியப்பட்ட திட்டத்தில் தோராயமாக 2180 விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும், இந்த திட்ட காலத்தில் சுமார் 83,000 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், கணிசமான எண்ணிக்கையிலான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்