தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cyclone Hamoon: புதிய புயலால் ஆந்திரா, தமிழ்நாட்டில் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு

Cyclone Hamoon: புதிய புயலால் ஆந்திரா, தமிழ்நாட்டில் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு

Marimuthu M HT Tamil

Oct 23, 2023, 02:44 PM IST

google News
ஹமூன்: ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இரண்டு புயல்களால் தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திராவில் மழை அதிகம் பொழியும் எனத் தெரிகிறது. (AFP)
ஹமூன்: ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இரண்டு புயல்களால் தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திராவில் மழை அதிகம் பொழியும் எனத் தெரிகிறது.

ஹமூன்: ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இரண்டு புயல்களால் தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திராவில் மழை அதிகம் பொழியும் எனத் தெரிகிறது.

வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகியுள்ள ஹமூன் மற்றும் தேஜ் புயலின் காரணமாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இந்த வாரத்தில் மழைப்பொழிவு, காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிக்கையின்படி, 'வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை (அக்டோபர் 24) குறைந்த தீவிரம் கொண்ட புயலாக மாறக்கூடும். இதனால் வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இதனால் தென்மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. 

ஹமூன் புயல் குறித்த 10 முக்கிய அம்சங்கள்: 

  • வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
  • புயல் உருவாகிய பிறகு, ஈரான் வழங்கிய பெயரான 'ஹமூன்' என்று அழைக்கப்படும்.
  • இந்த புயல் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு வடகிழக்கு நோக்கி நகர்ந்த பின்னர், மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் தற்போது நிலை கொண்டுள்ளது.
  • இது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 400 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தில் திகாவிலிருந்து 550 கி.மீ. தென்-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.
  • ஹமூன் சூறாவளி அமைப்பின் தாக்கத்தின் கீழ், அக்டோபர் 23 அன்று கடலோர ஒடிசாவில் ஒரு சில இடங்களிலும், அக்டோபர் 24-25 அன்று பல இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • வங்காள விரிகுடாவின் கடலோர மாவட்டங்களாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார், மயூர்பஞ்ச், அங்குல், தேன்கனல், பௌத், கந்தமால், ராயகடா, கோராபுட் மற்றும் மல்கங்கிரி ஆகியப் பகுதிகளில் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின், புவனேஸ்வர் மையத்தின் தகவலின்படி, நாளை காலை 8.30 மணி முதல் 24 மணிநேரத்திற்கு கியோஞ்சர், மயூர்பஞ்ச் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
  • இதற்கிடையில், ஒடிசா அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் எந்த நிகழ்வுக்கும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது மற்றும் கனமழை ஏற்பட்டால் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
  • மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வறிக்கையின்படி, இந்தப் புயல், வரும் அக்டோபர் 25ஆம் தேதி வங்காளதேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையேயுள்ள இடத்தில் கரையைக் கடக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி