Cyclone Biparjoy Update : தீவிரமடையும் பைபர்ஜாய் புயல்! குஜராத்தின் கட்சில் கரையை கடக்கிறது!
Jun 12, 2023, 08:15 AM IST
Cyclone Biparjoy Update : பைபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக நேற்று இருந்தது. இன்று இன்னும் தீவிரமடைந்து குஜராத்தின் கட்ச் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைபர்ஜாய் புயல் அதிதீவிர புயலில் இருந்து மேலும் வலுபெற்று குஜராத் மாநிலத்தின் கட்சில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத்தின் கட்ச் மற்றும் கவுராஷ்ட்ரா கடற்கரை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பைபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்துக்கு நேற்று இரவு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டது. மத்திய அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பைபர்ஜாய் புயல், குஜராத்தின் மண்டாவி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையை வரும் 15ம் தேதி அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆதிதிவிர புயலுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து, குஜராத்தின் கண்டாலா மாவட்டத்தில் உள்ள கட்ச் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தற்காலிக குடியிருப்புகளுக்கு தீனதயாள் துறைமுக அதிகாரி அனுப்பிவைத்தனர். தீனதயாள் துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் கூறுகையில், துறைமுகத்தில் இருந்து 6 கப்பல்கள் சென்றுவிட்டன. இன்று திங்கட்கிழமை 11 கப்பல்கள் புறப்படும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். துறைமுக அதிகாரிகள் மற்றும் கப்பலின் சொந்தக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மும்பை மற்றும் மஹாராஷ்ட்ராவின் பல்வேறு இடங்களிலும் இந்த பைபர்ஜாய் புயல் காரணமாக மழை பெய்தது. மேலும் புயலின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் வேகமும் உயர்ந்தது.
பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் அதன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். புயலால் சிந் கடற்கரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அந்தப்பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் உடனடி பிரச்னைகள் முகமை நேற்று தொடர் கூட்டங்களை நடத்தி ஆலோசனை செய்தது. அந்த குழுவினரால் எதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், யுஏஇயில் ஏற்கனவே மேற்கொண்ட வெப்ப மண்டல நிலைகளை கண்காணித்து மதிப்பிடும் வேலையை இங்கும் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனைகளை செய்தது.
இந்த முகமை பைபர்ஜாய் புயலை அதி தீவிர புயலாக கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 165 முதல் 175 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கில் இருந்து வடகிழக்கு நோக்கி இந்தப்புயல் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இந்தப்புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு யுஏஇக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்