தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cyber Criminals: சிபிஐ எனக் கூறி ஐ.டி.நிறுவன மூத்த அதிகாரியிடம் ரூ.3.70 கோடி பணம் பறிப்பு - நடந்தது என்ன?

Cyber criminals: சிபிஐ எனக் கூறி ஐ.டி.நிறுவன மூத்த அதிகாரியிடம் ரூ.3.70 கோடி பணம் பறிப்பு - நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil

Nov 29, 2023, 05:10 PM IST

google News
சி.பி.ஐ., போலீஸ் எனக்கூறி ஐ.டி. நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ. 3.70 கோடி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சி.பி.ஐ., போலீஸ் எனக்கூறி ஐ.டி. நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ. 3.70 கோடி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சி.பி.ஐ., போலீஸ் எனக்கூறி ஐ.டி. நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ. 3.70 கோடி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), சி.பி.ஐ (CBI) மற்றும் மும்பை காவல்துறையின் அதிகாரி எனக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ.3.70 கோடி பணத்தை ஒரு கும்பல் சுருட்டியுள்ளது.

கர்நாடாகா மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவன மூத்த அதிகாரிக்கு கடந்த 21ஆம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பை வகோலா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்திருக்கிறார். உங்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் உங்களது செல்போன் எண்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் தொடர்பு கொண்டு, இன்ஃபோசிஸ் ஊழியர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு எண் மூலம் சட்ட விரோத விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட எண் தன்னுடையது கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு டிராய் ஊழியர் என பேசியவர், அந்த எண் உங்களது ஆதார் கார்டை போலியாக வைத்து பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு இன்ஃபோசிஸ் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், டிராய் ஊழியர் போன்று பேசியவர் உடனடியாக செல்போன் இணைப்பை அருகில் உள்ள வேறு நபரிடம் கொடுத்துள்ளார். அவர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக இன்ஃபோசிஸ் ஊழியர் மும்பை காவல் நிலையத்துக்கும், டெல்லி, மும்பையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்துக்கும் விசாரணைக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். தவறும்பட்சத்தில் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறி மிரட்டியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் ஊழியருக்கு வீடியோ கால் செய்துள்ளனர். அதில் போலியாக போலீஸ் ஸ்டேஷன் போன்றும், காக்கி யூனிபார்ம் அணிந்து போலீஸார் இருப்பது போன்றும், தங்களது அடையாள அட்டை, இன்போசிஸ் ஊழியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார் ஆகியவற்றை காண்பித்து உண்மையிலேயே போலீஸார் தான் என அவரை நம்ப வைத்துள்ளனர். இதனால் பீதியடைந்த இன்போசிஸ் ஊழியர் கடந்த 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை 3 நாள்களில் ரூ.3.70 கோடியை மர்மநபர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கடந்த 25ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.  புகாரைத் தொடர்ந்து பணத்தை பறித்த மர்மகும்பலை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி