தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ctet Exam 2023 : ‘சிடெட்’ மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகள் எப்போது? – சிபிஎஸ்இ வெளிட்டுள்ள விவரங்கள் உள்ளே!

CTET Exam 2023 : ‘சிடெட்’ மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகள் எப்போது? – சிபிஎஸ்இ வெளிட்டுள்ள விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil

Jun 19, 2023, 09:57 AM IST

google News
சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகள் பேனா பேப்பர் கொண்டு எழுதும் நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகள் பேனா பேப்பர் கொண்டு எழுதும் நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகள் பேனா பேப்பர் கொண்டு எழுதும் நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை சிடெட் என்ற பெயரில் சிபிஸ்இ நடத்தி வருகிறது. சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பேனா, பேப்பர் வைத்து எழுதும் நேரடி முறையில் இந்தத் தேர்வுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேர்வர்கள் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதில் பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பட்டியலின மக்களுக்கு ரூ.500ம், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.600ம் கட்டணமாக பெறப்பட்டது.

இதற்குத் தேர்வர்கள் விண்ணப்பித்ததை அடுத்து, மே 29 முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பங்களைத் திருத்த அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளதாக தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அதற்காக காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் ஷிஃப்ட்டும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை 2ஆவது ஷிஃப்ட்டும் நடைபெறுகிறது. மொத்தம் இரண்டரை மணி நேரத்துக்கு, 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1ற்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை இருவேளைகளில் நடைபெற்றது. அப்போது இந்த தேர்வுகளை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு குறித்த விவரங்கள், தேர்வு நடைபெறும் மொழிகள், பாடத்திட்டம், தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற

https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2023/04/2023042786.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு https://ctet.nic.in " href="http:// https://ctet.nic.in " target="_blank" rel="dofollow noopener">https://ctet.nic.in ஆகியவற்றில் கிளிக் செய்து உள்ளே செல்லலாம்.

மேலும் இந்த தேர்வை எழுதுவதற்கான அட்மிட் கார்ட்கள் எப்போது கிடைக்கும் என்ற தகவலை பெறுவதற்கு தொடர்ந்து மேலே குறிப்பிட்டுள்ள இணைய தள முகவரிகளை சரிபார்த்துகொண்டேயிருக்க வேண்டும் என்று கேட்டுப்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கன்பர்மேஷன் பக்கத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை கொடுக்கும்போது சரியான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி