constitution Day 2023 : இந்திய அரசியலமைப்பு சாசன தினம்! – சில தகவல்கள்!
Nov 26, 2023, 06:19 AM IST
தேசிய சட்ட தினம், இந்திய அரசியலமைப்பு சாசன தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்திய அரசியலமைப்பு சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தை எடுத்துக்கொண்டதை நினைவூட்டும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார்.
இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த முதன்மை வடிவமைப்பாளர் ஆவார். வடிவமைப்பு குழுவின் சேர்மனாக இருந்தார். இவர் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். இவர் பல்வேறு சட்டங்களை வடிவமைத்தவர். சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளை மையமாகக்கொண்டு சீர்திருத்த சட்டங்களை வடிவமைத்தார்.
சட்ட வடிவமைப்பு குழுவின் சேர்மன்
டாக்டர் அம்பேத்கர், சட்ட வடிவமைப்பு குழுவின் சேர்மனாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்தக்குழு தான் புதிய அரசியலமைப்பு சாசனத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது.
சமூக சீர்திருத்தவாதி மற்றும் சமூக நீதிக்கான வழக்கறிஞர்
இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்ததை தவிர அம்பேத்கர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. விளிம்பு நிலை மனிதர்களின் உரிமைக்காக போராடியவர். இவர் சமூக பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
அடிப்படை உரிமைகளுக்கு முக்கிய பங்களிப்புகள்
அரசியல் அமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமைகளை சேர்த்ததில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார். உரிமைகளை பாதுகாப்பது மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகிய வசதிகளை அவர் சட்டத்தில் சேர்த்தார்.
தலித் உரிமைகளுக்காக போராடியவர்
தலித் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர். தீண்டாமைக்கும் எதிராக போராடினார். தலித் மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுப்பட்டார்.
சர்வதேச அங்கீகாரம்
சட்டம் சமூக நீதி மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு ஆகியவை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இவருக்கு இறந்த பின் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. 1990ம் ஆண்டில் வழக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய விருது.
அம்பேத்கர் ஜெயந்தி
அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தேசத்துக்கு அவரின் பங்களிப்பை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்