'ஒரே நாடு, ஒரே பால்' கோஷம்! அமித்ஷாவை விளாசும் ஜெயராம் ரமேஷ்!
Apr 12, 2023, 04:42 PM IST
"அமித் ஷாவும் பாஜகவும் பல மாநில கூட்டுறவு சங்கங்களாக ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளின் கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்கு மாற்ற விரும்புகிறார்கள் - ஜெயராம் ரமேஷ்
“ஒரே நாடு, ஒரே பால்” என்ற பாஜகவின் முழக்கத்தை காங்கிரஸ் அனுமதிக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கர்நாடக அரசின் பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை குஜராத்தின் அமுல் நிறுவனத்துடன் இணைக்க பாஜக திட்டமிடுவதாக காங்கிர்சஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இக்குற்றச்சாட்டுக்கு பாஜக மறுத்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மாநிலப்பட்டியலில் வருகிறது என அரசியமைப்பு கூறும் நிலையில் அதனை புறக்கணிக்கும் வேலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா முயல்வதாக குற்றம்சாட்டி உள்ளார். கூட்டுறவு சங்கங்களை மாநில பாடமாக தெளிவாக வரையறுக்கும் அரசியலமைப்பை பாஜகவும், கூட்டுறவு அமைச்சர் அமித் ஷாவும் புறக்கணிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், மாண்டியாவில் கர்நாடக பால் கூட்டமைப்பின் ன் மெகா டெய்ரியின் திறப்பு விழாவின் போது பேசிய அமித்ஷா "அமுல் மற்றும் நந்தினி இடையேயான ஒத்துழைப்பு பால் துறையில் அதிசயங்களைச் செய்ய முடியும்" என்று கூறியிருந்தார். மேலும் குஜராத்தைச் சேர்ந்த பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், அதன் பால் மற்றும் தயிர் சப்ளை செய்வதற்காக கர்நாடக சந்தையில் நுழைவதாக கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அறிவித்தது.
ஜெயராம் ரமேஷ் தனது அறிக்கையில், அமுல் மற்றும் நந்தினி ஆகிய இரண்டும் வெண்மைப் புரட்சியின் தேசிய வெற்றிக் அடையாளங்கள் என்று குறிப்பிட்ட ரமேஷ், பல ஆண்டுகளாக இந்த பரவலாக்கப்பட்ட பார்வையை வளர்ப்பதற்கு காங்கிரஸ் உதவியது, கோடிக்கணக்கான பால் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து சுயாட்சியை உறுதி செய்தது. "இதற்கு மாறாக, அமித் ஷா தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்வதாக குற்றம் சாட்டினார்.
"அமித் ஷாவும் பாஜகவும் பல மாநில கூட்டுறவு சங்கங்களாக ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளின் கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்கு மாற்ற விரும்புகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.