தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Revanth Reddy Takes Oath As Cm: தெலங்கானாவின் இரண்டாவது முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.. துணை முதல்வர் யார்?

Revanth Reddy Takes Oath As CM: தெலங்கானாவின் இரண்டாவது முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.. துணை முதல்வர் யார்?

Manigandan K T HT Tamil

Dec 07, 2023, 02:17 PM IST

google News
Telangana CM oath taking ceremony: ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நடந்தது. (PTI)
Telangana CM oath taking ceremony: ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நடந்தது.

Telangana CM oath taking ceremony: ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நடந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலங்கானாவின் இரண்டாவது முதல்வராக அக்கட்சித் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார். துணை முதல்வராக பாட்டி விக்ரமார்கா பதவியேற்றார்.

ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடைபெற்றது. ரெட்டி 2014 இல் உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வரானார்.

பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவி சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜூன் 2021 இல், அவர் என் உத்தம் குமார் ரெட்டிக்கு பதிலாக தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதியிடம் (பிஆர்எஸ்) காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி மொத்தமுள்ள 119 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றியது.

இந்தியாவின் இளைய மாநிலத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) 38 இடங்களை வென்றது. பாஜக 8 இடங்களிலும், AIMIM 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ரேவந்த் ரெட்டி 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மல்காஜ்கிரியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 சட்டமன்றத் தேர்தலில், அவர் 2009 மற்றும் 2014 இல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கோடங்கல் தொகுதியை இழந்தார். தெலுங்கு தேசம் கட்சியில் சேருவதற்கு முன்பு, அவர் சுயேட்சையாக தேர்தலில் வெற்றி பெற்றார்.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற ரேவந்த், தேர்தலுக்கு முன்பாக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என சுமார் 30 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அறிவித்தார்.

ரேவந்த் ரெட்டி 1992 இல் காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டியின் மருமகள் கீதா ரெட்டியை மணந்தார். ரேவந்த் ரெட்டி குடும்பத்துக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு முன், ரேவந்த் தனது குடும்பத்தின் விவசாயத் தொழிலிலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டார்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை