தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024: ’வாரணாசி முதல் ரேபரேலி வரை!’ உ.பி.யில் காங்கிரஸ் களம் இறங்கும் தொகுதிகள் இதுதான்!

Lok Sabha Election 2024: ’வாரணாசி முதல் ரேபரேலி வரை!’ உ.பி.யில் காங்கிரஸ் களம் இறங்கும் தொகுதிகள் இதுதான்!

Kathiravan V HT Tamil

Feb 29, 2024, 05:35 PM IST

google News
”உத்தரபிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிடுகின்றன”
”உத்தரபிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிடுகின்றன”

”உத்தரபிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிடுகின்றன”

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, உத்தரபிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது. 

சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி ஆன நிலையில், ரேபரேலி தொகுதியில் முதன்முறையாக பிரியங்கா காந்தி வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகள்:-

  • ரேபரேலி
  • அமேதி
  • ஃபதேபூர் சிக்ரி
  • சஹரன்பூர்
  • பிரயாக்ராஜ்
  • மகாராஜ்கஞ்ச்
  • வாரணாசி
  • அம்ரோஹா
  • ஜான்சி
  • புலந்த்ஷாஹர்
  • காசியாபாத்
  • மதுரா
  • சீதாபூர்
  • பாரபங்கி
  • கான்பூர்
  • பான்ஸ்கான்
  • தியோரியா

ஆகிய 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.  ரேபரேலி, அமேதி, வாரணாசி ஆகிய 3 தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக உள்ளது. வாரணாசி பிரதமர் நரேந்திர மோடி தொகுதி ஆகும். அமேதி தொகுதியில் கடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோற்றார். 

உடல்நலக் காரணங்களுக்காக சோனியா காந்தி அதைக் காலி செய்து மாநிலங்களவைக்கு மாறும் வரை ரேபரேலி சோனியா காந்தியின் இருக்கையாக இருந்தது.

உத்தரப்பிரதேசத்தை போல் மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ தொகுதியை சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மியுடன்னும், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடனும் காங்கிரஸ் கட்சியால் தொகுதி பங்கீடு செய்ய முடியாமல் சிக்கல் உள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் முதலில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு தருவதாக அறிவித்தார். பின்னர் அதை 15 ஆக மாற்றினார். இறுதியில் 17 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த கூட்டணிகள் இறுதியாக, அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி இடையேயான தொலைபேசி உரையாடல் காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை