தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chhattisgarh Polls: சத்தீஸ்கரில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

Chhattisgarh Polls: சத்தீஸ்கரில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

Manigandan K T HT Tamil

Oct 25, 2023, 04:22 PM IST

google News
Chhattisgarh Assembly Elections 2023: அம்பிகாபூர் தொகுதியில் பாஜக தலைவர் ராஜேஷ் அகர்வாலை மாநில துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோவுக்கு எதிராக பாஜக நிறுத்தியுள்ளது. (PTI)
Chhattisgarh Assembly Elections 2023: அம்பிகாபூர் தொகுதியில் பாஜக தலைவர் ராஜேஷ் அகர்வாலை மாநில துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோவுக்கு எதிராக பாஜக நிறுத்தியுள்ளது.

Chhattisgarh Assembly Elections 2023: அம்பிகாபூர் தொகுதியில் பாஜக தலைவர் ராஜேஷ் அகர்வாலை மாநில துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோவுக்கு எதிராக பாஜக நிறுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது நான்காவது மற்றும் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் , நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் வெற்றியை அடைவதற்கான முயற்சியில் சத்தீஸ்கரில் தற்போதைய பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கைப்பற்ற பாஜக பார்க்கிறது.

இறுதிப் பட்டியலில் அம்பிகாபூர் தொகுதியில் மாநில துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோவை எதிர்த்து பாஜக தலைவர் ராஜேஷ் அகர்வால் நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சியின் இறுதிப் பட்டியலில் பெல்டாராவைச் சேர்ந்த சுஷாந்த் சுக்லா, கஸ்டோலில் இருந்து தானிராம் திவார் மற்றும் பெமேதராவில் இருந்து திபேஷ் சாஹு உட்பட நான்கு வேட்பாளர்கள் உள்ளனர்.

பெல்டாரா தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ரஜ்னிஷ் சிங்குக்கு பாஜக டிக்கெட் மறுத்தது குறிப்பிடத்தக்கது. மாநில இளைஞர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான சுக்லா, பாஜகவின் இளைஞர் பிரிவான மாநில பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் இணைப் பொறுப்பாளராக உள்ளார்.

சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறும். வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படும்.

அம்பிகாபூர் தொகுதியில், அக்கட்சி அதன் சர்குஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் அகர்வாலை நிறுத்தியுள்ளது. துணை முதல்வரும், தற்போதைய எம்எல்ஏவுமான டிஎஸ் சிங் தியோ அம்பிகாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தொழிலதிபரான அகர்வால், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

மற்ற இரண்டு வேட்பாளர்களான தானிராம் திவார் (கஸ்டோல் தொகுதி) மற்றும் திபேஷ் சாஹு (பெமேதரா) ஆகியோரும் புதிய முகங்கள்.

பாஜகவின் 90 வேட்பாளர்களில் 33 பேர் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), 30 பேர் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி), 10 பேர் பட்டியல் சாதியினர் (எஸ்சி) என்று மாநில பாஜக ஊடக இணைப் பொறுப்பாளர் அனுராக் அகர்வால் தெரிவித்தார்.

தற்போது மாநிலத்தில் உள்ள 90 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. அக்கட்சியின் 21 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில், துர்க் மாவட்டத்தில் உள்ள படான் பகுதியில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதிராக களமிறக்கப்பட்ட மக்களவை எம்பி விஜய் பாகேல் இடம் பெற்றுள்ளார்.

தற்போதைய 13 எம்எல்ஏக்களில் இருவருக்கு அக்கட்சி இம்முறை டிக்கெட் மறுத்துள்ளது. காங்கிரஸ் தனது 90 வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை