தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chhattisgarh Govt: விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு முடிவு

Chhattisgarh govt: விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு முடிவு

Manigandan K T HT Tamil

Jan 06, 2024, 03:25 PM IST

google News
ஏற்கனவே ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் ஏக்கருக்கு 21 குவிண்டால் என்ற அளவில் நெல்லை விற்பனை செய்ய வசதி செய்து தரப்படும். (HT file)
ஏற்கனவே ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் ஏக்கருக்கு 21 குவிண்டால் என்ற அளவில் நெல்லை விற்பனை செய்ய வசதி செய்து தரப்படும்.

ஏற்கனவே ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் ஏக்கருக்கு 21 குவிண்டால் என்ற அளவில் நெல்லை விற்பனை செய்ய வசதி செய்து தரப்படும்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல்லை ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில், ஏற்கனவே ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் ஏக்கருக்கு 21 குவிண்டால் என்ற அளவில் நெல்லை விற்கும் வசதி அளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு முன், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய 'மோடியின் உத்தரவாதம்' என அறிவித்திருந்தது. பாஜக அரசு தற்போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் கீழ், பொதுமக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றும் என்று சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறினார். “விவசாயிகள் மற்றும் ஏழைகள் என்னுடைய அரசாங்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும். ஒரு ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் விவசாயிகளிடமிருந்து 3100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்” என்று சாய் மேலும் கூறினார்.

விவசாயிகள் நெல் விற்பனை செய்வதில் எந்த வித பிரச்சனையும் ஏற்படாத வகையில் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சிறந்த மற்றும் போதுமான ஏற்பாடுகளை உறுதி செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பர் 01 முதல் மாநிலத்தில் நெல் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 26.86 லட்சம் விவசாயிகள் ஆதரவு விலையில் நெல்லை விற்க பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட நெல் பரப்பு 33.15 லட்சம் ஹெக்டேர். இதுவரை 9.25 லட்சம் விவசாயிகள் 42.20 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ஆதரவு விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி