தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: சென்னை மக்களே பேருந்து நிறுத்தத்தில் இனி காத்திருக்க வேண்டாம்.. உங்களுக்கு உதவ காத்திருக்கும் செயலி!

HT Tech SPL: சென்னை மக்களே பேருந்து நிறுத்தத்தில் இனி காத்திருக்க வேண்டாம்.. உங்களுக்கு உதவ காத்திருக்கும் செயலி!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:15 AM IST

google News
சென்னை மாநகரில் எந்த நேரத்திற்கு, என்ன பேருந்து கிடைக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள உதவும் செயலி தான் Chennai Bus.
சென்னை மாநகரில் எந்த நேரத்திற்கு, என்ன பேருந்து கிடைக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள உதவும் செயலி தான் Chennai Bus.

சென்னை மாநகரில் எந்த நேரத்திற்கு, என்ன பேருந்து கிடைக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள உதவும் செயலி தான் Chennai Bus.

சென்னையில் மற்ற நகரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்து வருகின்றனர்.

பெரும்பாலானோர் புறநகர் ரயில்களையும், சொந்த வாகனங்களையும் பயன்படுத்தி வந்தாலும், இந்த வசதி இல்லாதவர்கள் பேருந்துகளை நாடி வருகின்றனர்.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குறைந்த செலவில் சென்று சேர அரசுப் பேருந்துகளே பலருக்கும் உதவி வருகிறது.

ஆனால், சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் பேருந்து எப்போது நாம் நிற்கு பேருந்து நிறுத்தத்திற்கு வருகிறது, எப்போது செல்கிறது என்ற தகவல் பலருக்கும் தெரியாது. அதேபோல், வெளியூர்களில் இருந்து வேலைநிமித்தமாக சென்னை வருபவர்கள் எந்த பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது என்பதில் பெரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் தான் இந்தச் செயலி. சென்னை மாநகரில் எந்த நேரத்திற்கு, என்ன பேருந்து கிடைக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள உதவும் செயலி தான் Chennai Bus.

இந்தச் செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இந்தச் செயலியை நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்துகொண்ட பிறகு, MTC, SETC என இரண்டு ஆப்ஷன்கள் கேட்கும்.

சென்னையைப் பொறுத்தவரை MTC தான். அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதில் நீங்கள் Search Bus Route என்பதை பயன்படுத்தி குறிப்பிட்ட எண் கொண்ட பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு நேரத்தில் நீங்கள் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேரும் என்ற விவரம் காண்பிக்கும்.

Map view ஆப்ஷனை தேர்வு செய்து பேருந்து இப்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது என்ற விவரத்தை பார்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு பேருந்து எண் தெரியவில்லை. ஆனால், எங்கு இருந்து எங்கு செல்ல வேண்டும் என்பது தெரிந்திருப்பின், Search Destination-ஐ தேர்வு செய்து அதை உள்ளிட வேண்டும்.

அதைத் தொடர்ந்து, அந்த வழித்தடத்தில் எந்தப் பேருந்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்ற விவரம் காண்பிக்கும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி பயணிக்கும் இடங்களை Favorites ஆப்ஷனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம்: https://play.google.com/store/search?q=chennai%20bus&c=apps 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி