தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Buzz Aldrin: நிலவில் 2ஆவதாக கால் பதித்தவருக்கு 93 வயதில் 4வது திருமணம்!

Buzz Aldrin: நிலவில் 2ஆவதாக கால் பதித்தவருக்கு 93 வயதில் 4வது திருமணம்!

Karthikeyan S HT Tamil

Jan 21, 2023, 07:36 PM IST

google News
Buzz Aldrin 4th Marriage: நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் முதன்முதலில் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் தனது 93 வயதில் திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. (Buzz Aldrin/Twitter)
Buzz Aldrin 4th Marriage: நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் முதன்முதலில் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் தனது 93 வயதில் திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Buzz Aldrin 4th Marriage: நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் முதன்முதலில் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் தனது 93 வயதில் திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணித்தது. அதில், விண்கலத்தின் கட்டளை தலைமை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை பிரிவு விமானியாக மைக்கேல் காலின்ஸுமுடன் மற்றுமோர் அதிகாரியாக பயணித்தவர் பஸ் ஆல்ட்ரின்.

நான்கு நாட்கள் பயணத்துக்கு பிறகு அந்த விண்கலம் ஜூலை 21 அன்று நிலவை அடைந்தது. பஸ் ஆல்ட்ரின் முதலில் நிலவில் இறங்குவதற்கான கட்டளையை நாசா பிறப்பித்தும், அதை அவர் ஏற்க மறுத்த நிலையில், முந்திக்கொண்ட ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் பஸ் ஆல்ட்ரின் இரண்டாவது நபராகவே கருதப்படுகிறார்.  இந்நிலையில், இவர் தனது 93ஆவது பிறந்த நாளை நேற்று (ஜன.20) கொண்டாடிய நிலையில், அன்று தனது நீண்டகால காதலியை மணந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

ஆல்ட்ரின் தனது மனைவி டாக்டர் அன்கா ஃபௌருடன் இருக்கும் புகைப்படங்களை இன்று டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய விழாவில் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆல்ட்ரினின் 4வது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆல்ட்ரின் டிவிட்டர் பதிவு 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும், 7.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது. கருத்துப் பிரிவில், பல டிவிட்டர் பயனாளர்கள் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். அதில், ஒருவர், "நீங்கள் நிச்சயம் சந்திரனுக்கு மேல்தான் தற்போது இருக்க வேண்டும்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மான்கிளேர் பகுதியில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பிறந்த பஸ் ஆல்ட்ரின், அமெரிக்கன் வார் அகாடமியில் 1951 ஆம் ஆண்டு படித்து பட்டம்பெற்று அமெரிக்க வான்படையில் தன்னை இணைத்துக்கொண்டார். கொரியாவில் நடந்த போரில் விமானியாக தனது பங்களிப்பை செலுத்திய பஸ் ஆல்ட்ரின் பின்னர் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்று பின்னர் மீண்டும் அமெரிக்க வான்படையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நாசாவில் இருந்து 1971ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆல்ட்ரின், மூன்று முறை திருமணம் செய்து விவாகாரத்தான நிலையில், 4 ஆவதாக தனது ஜூனியரான டாக்டர் அன்கா ஃபௌரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போலோ 11 விண்கலம் மிஷனில் இவர் மட்டுமே இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி