தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Budget 2024 Live Updates: மோடி 3.o அரசின் முதல் பட்ஜெட்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் நேரலை!
Budget 2024 Live Updates: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மூன்றாவது முறையாக பொறுப்பெற்ற பின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெறப்போகிறது? அத்தனை அப்டேட்டுகளும் இங்கே!
Budget 2024 Live Updates: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மூன்றாவது முறையாக பொறுப்பெற்ற பின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெறப்போகிறது? அத்தனை அப்டேட்டுகளும் இங்கே!

Budget 2024 Live Updates: மோடி 3.O அரசின் முதல் பட்ஜெட்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் நேரலை!

Jul 23, 2024, 12:59 PM IST

Budget 2024 Live Updates: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மூன்றாவது முறையாக பொறுப்பெற்ற பின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெறப்போகிறது? அத்தனை அப்டேட்டுகளும் இங்கே!

Jul 23, 2024, 12:59 PM IST

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

Budget 2024 Live Updates: மக்களவையில் 2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, சரியாக காலை 11.04 மணிக்கு தனது உரையை தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகல் 12.28 மணிக்கு நிறைவு செய்தார்.

Jul 23, 2024, 12:52 PM IST

புதிய வருமான வரி முறை

Budget 2024 Live Updates: தனி நபர்களுக்கான வருவாயில் ரூ.3 லட்சம் வரை வரி விதிப்பு கிடையாது. ரூ.3-ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வதி விதிக்கப்படும் - நிதியமைச்சர் சீதாராமன்

புதிய வருமான வரி முறை குறித்த அறிவிப்பு
புதிய வருமான வரி முறை குறித்த அறிவிப்பு

Jul 23, 2024, 12:43 PM IST

ஏஞ்சல் வரி ரத்து

Budget 2024 Live Updates: தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு - நிதியமைச்சர் சீதாராமன்

Jul 23, 2024, 12:41 PM IST

வருமான வரிச்சட்டம் 1961 குறித்து விரிவான மறு ஆய்வு

Budget 2024 Live Updates: வருமான வரிச்சட்டம் 1961 குறித்து விரிவான மறு ஆய்வு செய்யப்படும். புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு (standard deduction) 50,000- லிருந்து ரூ.75,000 ஆக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Jul 23, 2024, 12:40 PM IST

இணைய வர்த்தகத்திற்கான TDS குறைப்பு

Budget 2024 Live Updates: இணைய வர்த்தகத்திற்கான TDS வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Jul 23, 2024, 12:31 PM IST

"இனி கிரிமினல் குற்றம்"

Budget 2024 Live Updates: மூன்றில் இரு பங்கினர் புதிய வருமான வரி முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 12:29 PM IST

தங்கம், வெள்ளிக்கு வரி குறைப்பு

Budget 2024 Live Updates: தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 23, 2024, 12:27 PM IST

செல்போனுக்கான சுங்கவரி குறைப்பு!

Budget 2024 Live Updates: செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

செல்போனுக்கான சுங்கவரி குறைப்பு -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
செல்போனுக்கான சுங்கவரி குறைப்பு -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 12:24 PM IST

சுங்கவரி ரத்து

Budget 2024 Live Updates: புற்றுநோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Jul 23, 2024, 12:22 PM IST

காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live Updates: காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 12:19 PM IST

விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1000 கோடி

Budget 2024 Live Updates: நாட்டில் உள்ள சிறிய அணு உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தனியார் துறையுடன் இணைந்து அரசு செயல்படும். அணுசக்திக்கான புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். நாட்டில் விண்வெளி சார்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 12:00 PM IST

300 யூனிட் இலவச மின்சாரம்

Budget 2024 Live Updates: இலவச சூரிய மின்சக்தி திட்டம் குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "பிரதம மந்திரி சூர்யகர் முஃப்ட் பிஜிலி யோஜனாட திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு கூரை சூரிய மின் தகடுகளை நிறுவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

300 யூனிட் இலவச மின்சாரம் பெற கூரை தகடுகளைப் பொருத்த திட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
300 யூனிட் இலவச மின்சாரம் பெற கூரை தகடுகளைப் பொருத்த திட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Jul 23, 2024, 11:51 AM IST

சிறு, குறு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

Budget 2024 Live Updates: நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். MSME நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024, 11:48 AM IST

1 கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

Budget 2024 Live Updates: ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:45 AM IST

கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்

Budget 2024 Live Updates: கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:40 AM IST

கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு - நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live Updates: முத்ரா கடன் உதவித் திட்டம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Jul 23, 2024, 11:38 AM IST

பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி

Budget 2024 Live Updates: 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம். நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும். ஆந்திராவில் பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:35 AM IST

பட்ஜெட்டில் பீகாருக்கு முக்கியத்துவம்!

Budget 2024 Live Updates: பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிப்பு. பீகார் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.26.000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Jul 23, 2024, 11:33 AM IST

ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

Budget 2024 Live Updates: ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு
ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

Jul 23, 2024, 11:30 AM IST

உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு

Budget 2024 Live Updates: உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Jul 23, 2024, 11:28 AM IST

ரூ.1.52 லட்சம் கோடி

Budget 2024 Live Updates: விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளது. 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம். வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு. - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:24 AM IST

மோடி3.0 அரசாங்கத்தின் 9 முன்னுரிமைகள்

Budget 2024 Live Updates: உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:18 AM IST

"80 கோடி மக்கள் பயன்"

Budget 2024 Live Updates: 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:16 AM IST

"விலைவாசி கட்டுக்குள் உள்ளது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live Updates: நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி. 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் . அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"விலைவாசி கட்டுக்குள் உள்ளது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"விலைவாசி கட்டுக்குள் உள்ளது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024, 11:08 AM IST

மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்

Budget 2024 Live Updates:: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Jul 23, 2024, 10:54 AM IST

பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Budget 2024 Live Updates: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

Jul 23, 2024, 10:42 AM IST

பட்ஜெட் ஆவணத்தை எவ்வாறு பெறுவது?

Budget 2024 Live Updates: பட்ஜெட் ஆவணங்களை 'யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்' மூலம் தெரிந்துகொள்ளலாம். 'யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்' ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். யூனியன் பட்ஜெட் இணையத்தின் மூலமும் பட்ஜெட் அறிவுப்புகளை தெரிந்துகொள்ளலாம். ஆவணங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கின்றன.

Jul 23, 2024, 10:34 AM IST

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Budget 2024 Live Updates: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கான ஒப்புதல் அளிக்கப்படும்.

Jul 23, 2024, 10:20 AM IST

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை

Budget 2024 Live Updates: குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை சந்தித்த பின்னர் நாடாளுமன்றத்திற்கு வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Jul 23, 2024, 10:08 AM IST

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live Updates: மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Jul 23, 2024, 09:48 AM IST

பட்ஜெட் உரையுடன் நிதியமைச்சர்

Budget 2024 Live Updates: சிவப்புநிற வெல்வெட் பெட்டியில் வைக்கப்பட்ட பட்ஜெட் உரையுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் புறப்பட்டார்.

Jul 23, 2024, 09:20 AM IST

முன்னாள் பிரதமர் சாதனையை முறியடிக்கிறார் நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live Updates: தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முறியடிக்கிறார். தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும் ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாகவும், ஒட்டுமொத்தமாக 10 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

Jul 23, 2024, 09:14 AM IST

நிதி அமைச்சகத்திற்கு வந்த நிர்மலா சீதாராமன்

Budget 2024 Live Updates: நிர்மலா சீதாராமன் தற்போது வெள்ளை மற்றும் பிங்க் நிற சேலை அணிந்து நிதி அமைச்சகத்திற்கு வந்துள்ளார். காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

Jul 23, 2024, 09:09 AM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆயத்தம்

Budget 2024 Live Updates: பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 11 மணிக்கு அவர் தாக்கல் செய்ய உள்ளார்.

Jul 23, 2024, 09:00 AM IST

இந்திய பங்கு சந்தை ஏற்றம்பெறுமா?

Budget 2024 Live Updates: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குசந்தையில் பரலவலான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்குதலுக்கு முன் இந்திய பங்கு சந்தை காலை நேரத்தில் சற்று ஏற்றம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் அடிப்படையில் பங்குசந்தை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம்.

Jul 23, 2024, 08:39 AM IST

திணரும் பாஜக

Budget 2024 Live Updates: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவை என தெலுங்கு தேசம் கட்சியும், பீகார் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர தங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை புறந்தள்ள இயலாத கட்டாயத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக திணறுகிறது.

Jul 23, 2024, 08:08 AM IST

6 புதிய மசோதாக்கள்

Budget 2024 Live Updates: பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, வானூர்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Jul 23, 2024, 07:50 AM IST

"சமூக-பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்"

Budget 2024 Live Updates: நடப்பாண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அத்துடன் ஜம்மு – காஷ்மீருக்கான பேரவை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலையடுத்து ‘கூட்டணி’ ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இந்த முழு பட்ஜெட்டில், பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூக-பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

Jul 23, 2024, 07:43 AM IST

மிக நீளமான உரை

Budget 2024 Live Updates: கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.இதுவே பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ஒருவர் நிகழ்த்திய உரைகளில் மிக நீளமானதாகும்.

Jul 23, 2024, 07:09 AM IST

மோடியின் 3.0வின் முதல் பட்ஜெட் இது!

Budget 2024 Live Updates: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் அவர், மொரார்ஜி தேசாயின் (6) சாதனையை முறியடிக்க உள்ளார். வருமான வரி செலுத்துபவர்களுக்கு உச்ச வரம்பில் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Jul 23, 2024, 07:06 AM IST

"பட்ஜெட் மூலம் வலிமையான அஸ்திவாரம் அமைப்போம்"

Budget 2024 Live Updates: பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் என்றும் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jul 23, 2024, 06:36 AM IST

மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

Budget 2024 Live Updates: இன்று தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Jul 22, 2024, 08:52 PM IST

மகிழ்ச்சியான அறிவிப்புகள் வருமா?

Budget 2024 Live Updates: தேர்தலில் சில மாநிலங்களில் ஏற்பட்ட சரிவுகளை சரி செய்யும் அளவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில மகிழ்ச்சியான அறிவிப்புகளை, குறிப்பாக சம்மந்தப்பட்ட மாநில மக்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.

Jul 22, 2024, 08:51 PM IST

தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பு என்ன?

Budget 2024 Live Updates: சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி மற்றும் கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Jul 22, 2024, 08:50 PM IST

எந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம்?

Budget 2024 Live Updates: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் இருப்பதால், அந்த இரு மாநிலங்களுக்கு பெரிய அளவில் பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருக்கலாம் என்று தெரிகிறது. 

Jul 22, 2024, 08:49 PM IST

எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2024 Live Updates: இந்த முறை கூட்டணி அரசாக பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பொதுமக்களை கவரும் திட்டங்கள், அறிவிப்புகள் வரலாம் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

Jul 22, 2024, 08:48 PM IST

இன்றைய பட்ஜெட் சிறப்புகள் என்ன?

Budget 2024 Live Updates: பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. 

    பகிர்வு கட்டுரை