Tamil Live News Updates : சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Aug 05, 2023, 09:08 PM IST
இன்றைய (05.08.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
மூன்று நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவர் தனி விமான மூலம் தற்போது சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
‘ஜெயிலர்' படத்தின் ‘ரத்தமாரே' பாடல்
‘ஜெயிலர்' படத்தின் ‘ரத்தமாரே' பாடல் லிரிக் வீடியோ வெளியானது.
பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விரைவில் சந்திரமுகி 2' படத்தின் முதல் பாடல்
சந்திரமுகி 2' படத்தின் முதல் பாடல் ‘ஸ்வாகதாஞ்சலி’ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ’நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அமித்ஷா பேசியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!
அனைவரும் எதிர்ப்பின்றி இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு
சாத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்து மூன்று மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் தொழிலதிபரை மிரட்டி பட்டாசு ஆலையை ராஜவர்மன் நண்பரின் மனைவி பெயரில் கிரையம் செய்த வழக்கில், சிவகாசி டவுன் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு. வழக்கில் முகாந்திரம் உள்ளதால் சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி ஆக்க வலியுறுத்தல்!
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து, அவர் மீண்டும் எம்.பியாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு!
விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை: சென்னையில் 4,70,301 விண்ணப்பங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சென்னையில் இதுவரை 98 வார்டுகளில் 4,70,301 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; 2ம் கட்டமாக 724 முகாம்கள் நடைபெறுகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் கலவரம்!
மணிப்பூரில் மெய்த்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் மீண்டும் வெடித்த வன்முறை வெடித்துள்ளது.
மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்-மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும்.
1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்- மு.க.ஸ்டாலின்
போலி பாஸ்போர்ட் தயாரித்த ஏஜெண்ட் கைது!
போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சித்த முக்கிய ஏஜெண்டான அந்தோணிசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தர விட்டுள்ளது.
கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், உபகரணங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட எதையும் வசூலிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை குறைக்க ஆணைம் மறுப்பு
தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 11வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 11வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் திட்டம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் தொடர்பாக, செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) திட்டமிட்டுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகம் 330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. புலிகாட் ஏரியை மாசுபடுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காட்டுப்பள்ளி துறைமுகம் - மக்கள் கருத்து கேட்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் தொடர்பாக, செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) திட்டம். காட்டுப்பள்ளி துறைமுகம் 330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும், புலிகாட் ஏரியை மாசுபடுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தக்காளி விலை குறைந்தது
கன்னியாகுமரி மாவட்டம் மையிலாடி, அகஸ்தீஸ்வரம், மகாதானபுரம் மற்றும் அஞ்சு கிராமம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன் கிலோ ரூ.200க்கு விற்பனையான தக்காளி, இன்று கிலோ ரூ.90க்கு குறைந்ததால், மக்கள் ஆனந்தம்.
11வது நாள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 11வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பனிமய மாதா கோயில் தேரோட்டம்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு செம்முனி ஆண்டவர் கோயில் திருவிழா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள குரும்பபாளையத்தில் செம்முனி ஆண்டவர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல்நிலை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி தனி மாநில தீர்மானத்துக்கு ஆளுனர் ஒப்புதல்
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கோரி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல். புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
பனிமய மாதா ஆலய தேரோட்டத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 தொழிலாளர்கள் பலி
மகாராஷ்ட்ராவில் கிணற்றின் உள்ளே சுவர் கட்டும் பணியின்போது, ஓரமாக குவிக்கப்பட்டு இருந்த மண் சரிந்து கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 4 பேரின் உடலையும், 4 நாட்களாக போராடி மீட்புப்படையினர் மீட்டனர். கிணறு தோண்டும் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரை மறித்த காட்டு யானை
கேரள மாநிலம் அட்டப்பாடியில் காரை வழிமறித்து தந்தத்தால் 3 முறை குத்தித் தாக்கிய காட்டு யானை. காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் தாக்குதலை நிறுத்தி யானை காட்டுக்குள் சென்றது. யாருக்கும் காயம் இல்லை.
இரவு நேரத்தில் யானைகள் நடமாடுவதால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
புளிய மரத்தில் மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை
அரசு முறை பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, மசினகுடி, முதுமலை பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குடியரசுத்தலைவரான பின் முதல்முறை சென்னை வருகிறார்.
டெல்லியில் மழை
டெல்லியில் இன்று காலை சாரல் மழை பெய்தது. டெல்லி, நொய்டா மற்றும் குருகிராமின் சில இடங்களில் இன்று காலை குறைவானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.
மண்ப்பூர் சட்டமன்ற கூட்டம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஆகஸ்ட் 21ம் தேதி சட்டமன்றம் கூட்டத்துக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் இடம்பெயர்வு மற்றும் 150க்கும் மேற்பட்டோல் கொல்லப்பட்டது குறித்து விவாதிக்கும்.