Pakistan drone: ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப் படை!
Oct 17, 2022, 12:37 AM IST
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவில் நமது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.
இந்த விமானம் பாகிஸ்தானிலிருந்து வந்தது எனக் கண்டுபிடித்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி இரவு பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட ராணியா பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.
அதேபோல் எல்லை பாதுகாப்புப் படையினர் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அந்த விமானத்தின் எடை சுமார் 12 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் அந்த விமானத்திலிருந்த எட்டு இறக்கைகளில் இரண்டு இறக்கைகள் சேதமடைந்துள்ளன. தற்போது அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இது இரண்டாவது விமானம் என எல்லை பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.