தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rewari Boiler Blast: ஹரியானாவின் ரேவாரி நகர தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: பலர் காயம்

Rewari Boiler Blast: ஹரியானாவின் ரேவாரி நகர தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: பலர் காயம்

Marimuthu M HT Tamil

Mar 16, 2024, 10:24 PM IST

google News
Rewari Boiler Blast: ஹரியானாவின் ரேவாரி நகரிலுள்ள தொழிற்சாலையில் இரவு 7 மணியளவில் ஒரு பாய்லர் வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது.
Rewari Boiler Blast: ஹரியானாவின் ரேவாரி நகரிலுள்ள தொழிற்சாலையில் இரவு 7 மணியளவில் ஒரு பாய்லர் வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது.

Rewari Boiler Blast: ஹரியானாவின் ரேவாரி நகரிலுள்ள தொழிற்சாலையில் இரவு 7 மணியளவில் ஒரு பாய்லர் வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது.

Rewari Boiler Blast: ஹரியானா மாநிலத்தின் ரேவாரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பாய்லர் வெடித்ததில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

ரேவாரி தொழிற்சாலை பாய்லர் வெடிப்பு தொடர்பாக பொது மருத்துவர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், ‘’இந்த சம்பவம் ரேவாரி நகரின் தருஹேரா பகுதியில் நடந்துள்ளது.

நாங்கள் மருத்துவமனைகளை அலெர்ட் நிலையில் வைக்க எச்சரித்துள்ளோம். தொழிற்சாலைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளோம். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு தீவிர நோயாளி ரோஹ்தக் என்னும் நகரிலுள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார், "என்று அவர் கூறினார்.

தி ட்ரிப்யூனின் என்னும் ஊடகத்தின் கூற்றுப்படி, இரவு 7 மணியளவில் 'லைஃப்-லாங்’ என்னும் தொழிற்சாலையில் பாய்லரில் வெடிப்பு ஏற்பட்டது. ரோஹ்தக்கின் பி.ஜி.ஐ.எம்.எஸ் இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ். லோஹ்சாப், செய்திகளின் அடிப்படையில் அவசர சிகிச்சை மையத்தில் உள்ள மருத்துவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தொழிற்சாலைக்கு விரைந்தன. மேலும் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் நடந்த பாய்லர் வெடிப்பு: அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் சீதாப்பூரில் உள்ள சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 3 பேர், கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தனர். நகரின் ராம்கோட் காவல் நிலையப் பகுதியில் உள்ள டால்மியா ஜவஹர்பூர் சர்க்கரை ஆலையில் பராமரிப்புப் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அழுத்தம் அதிகரித்ததால் பாய்லர் வெடித்தபோது, அதன் மூடி குதித்து ஆலையின் தகரக் கொட்டகையில் மோதியது.

இதுதொடர்பாக சீதாபூர் அரசு அலுவலர் ஞானேந்திர திவேதியின் கூற்றுப்படி, ’’புதிதாக அமைக்கப்பட்ட எத்தனால் பாய்லர் பராமரிப்புப் பணியின்போது, அது சரியாக செயல்படுவதற்கு முன்பு வெடிப்பு ஏற்பட்டது’’ என்றார்.

 லக்னோவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்து குறித்து அறிந்ததாகவும், சீதாபூர் மாவட்ட ஆட்சியருக்கு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் தெரிகிறது. மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீதாப்பூர் போலீசார் சம்பவ இடத்தில் இறந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போன்ற சம்பவங்கள்:

நவம்பர் 20, 2023: வாரணாசியைச் சேர்ந்த 37 வயதான பொறியாளர் விபின் குமார் சிங், அயோத்தியின் புரா கலந்தர் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் உள்ள கொதிகலனில் தொழில்நுட்பக் குழுவினர் பழுதை சரிபார்த்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தார்.

ஜூன் 4, 2022: ஹாபூரில் உள்ள ஒரு இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரிய வெடிப்பு மற்றும் தீ விபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 33 பேர் பணிபுரியும் ரூஹி இன்டஸ்ட்ரீஸ் எலக்ட்ரானிக்ஸ் கருவி தயாரிப்பு பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நவம்பர் 1, 2017: ரேபரேலியில் அரசு நடத்தும் நிலக்கரியால் இயங்கும் என்டிபிசி உஞ்சஹர் ஆலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் 20 பேர் உட்பட 38 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி