தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election Results: 'தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்' - வருத்தத்துடன் பேசிய எடியூரப்பா!

Karnataka Election Results: 'தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்' - வருத்தத்துடன் பேசிய எடியூரப்பா!

Karthikeyan S HT Tamil

May 13, 2023, 03:59 PM IST

google News
Yediyurappa: கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Yediyurappa: கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Yediyurappa: கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகவில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 133, பாஜக - 65, மஜத - 21, மற்றவை- 5 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 124 தொகுதிகளில் பாஜக 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 73 தொகுதிகளிலும், மஜத 13 இடங்களிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜவின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தேர்தல் முடிவுகளைக் கண்டு பாஜக தொண்டர்கள் பீதி அடைய வேண்டாம். வெற்றியும் தோல்வியும் பாஜகவுக்கு புதிது அல்ல. நாம் இதற்கு முன்பும் தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளோம். 

கட்சியின் பின்னடவைக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.  பாஜக புறக்கணிக்கப்படக் கூடாது. இன்று ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு கட்சி வளர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை கொடுத்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது." என்று தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி