தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chhattisgarh Results 2023: சத்தீஸ்கரில் சட்டென மாறிய முன்னிலை நிலவரம்..ஜெட் வேகத்தில் எகிறிய பாஜக!

Chhattisgarh Results 2023: சத்தீஸ்கரில் சட்டென மாறிய முன்னிலை நிலவரம்..ஜெட் வேகத்தில் எகிறிய பாஜக!

Karthikeyan S HT Tamil

Dec 03, 2023, 12:34 PM IST

google News
சத்தீஸ்கரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், தற்போது அங்கு பாஜக முன்னிலை வகிக்கிறது.
சத்தீஸ்கரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், தற்போது அங்கு பாஜக முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், தற்போது அங்கு பாஜக முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சரியாக இன்று (டிசம்.3) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 33 தொகுதிகளிலும், பிறக்கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்த நிலையில், தற்போது அந்தக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 45.69 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 42.04 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் அடிப்படையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

நான்கு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் முதல்வர் பூபேஷ் பாகல் பதான் தொகுதியில் 21567 வாக்குகள் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜய் பாகல் 164 வாக்குகள் பின்தங்கி 21403 வாக்குகள் பெற்றுள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை