தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  2024 Lok Sabha: ’நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜே.டி.எஸ் உடன் பேசுவோம்’ கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை பேட்டி

2024 Lok Sabha: ’நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜே.டி.எஸ் உடன் பேசுவோம்’ கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை பேட்டி

Kathiravan V HT Tamil

Jul 16, 2023, 09:48 PM IST

google News
”கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், சுயேட்சைகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது” (Shrikant Singh)
”கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், சுயேட்சைகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது”

”கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், சுயேட்சைகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது”

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) மதசாற்பற்ற ஜனதாதளம் கட்சியை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

என்.டி.ஏ-வில் ஜே.டி (எஸ்) இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பொம்மை, “அது எங்கள் தலைமைக்கும், ஜே.டி.எஸ் தலைவர் எச்.டி.தேவே கவுடாவுக்கும் இடையேயான விவாதம்” என்றார்.

ஜே.டி (எஸ்) தலைவர் எச்.டி.குமாரசாமி சில உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார், அந்த திசையில் விவாதங்கள் தொடரும் என்றார். "அந்த விவாதங்களின் முடிவுகளின் அடிப்படையில் எதிர்கால அரசியல் முன்னேற்றங்கள் இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, “பாஜகவும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் இணைந்து மாநிலத்தில் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறுகையில், அரசியல் என்பது ஓடும் நீர், தேங்கி நிற்கவில்லை, அரசியலில் நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெறும் தேசிய நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மனதில் வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது பாஜகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று கூறிய அவர், “ஜேடிஎஸ் உடனான கூட்டணி குறித்து எங்கள் மட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை. உயர் மட்டத்தில் நடந்தது, எனக்குத் தெரியாது" என கூறினார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், சுயேட்சைகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி