5 State Election Results 2023: ’4 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை! காங்கிரஸ்க்கு பின்னடைவு!’
Dec 03, 2023, 10:56 AM IST
”5 State Election Results 2023: 4 மாநிலத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது”
4 மாநிலத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முழுமையாக முடிந்த நிலையில், 4 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 36 இடங்களில் பாஜகவும், 31 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் 147 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் உள்ள நிலையில், பிஎஸ்பி, ஜிஜிபி, உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில், பாஜக 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
தெலங்கானாவில் 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பி.ஆர்.எஸ் கட்சி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 6 இடங்களிலும், சிபிஐ ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சத்தீஸ்கர், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜகவும் முன்னிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்துள்ள தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி பாஜக 3 மாநிலங்களில் முன்னிலையில் உள்ள பாஜக தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. வாக்குக்கள் எண்ணப்பட்டு 4 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில் நேரம் செல்ல செல்ல தேர்தல் முடிவுகளில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.