விவசாயிகள் தற்கொலைக்கு யார் காரணம்? பாஜகவை கடுமையாக சாடிய பிஆர்எஸ் மூத்த தலைவர்
Jan 08, 2023, 02:14 PM IST
தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக கே.சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.
தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக கே.சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தெலங்கானா பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய், அந்த மாநிலத்தில் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவரான தசோஜு சரவண் கூறியதாவது:
பாஜக அறிவுரீதியாக திவாலாகிவிட்டது. முன்னேற்றங்களைக் காண முடியாமல் இருக்கிறது.தெலங்கானாவில் அப்பட்டமான பொய்களை அக்கட்சி பரப்பி வருகிறது.
பாஜக தலைவர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் தேர்ந்தவர்கள். கடந்த 9 ஆண்டுகளாக தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தெரிந்துகொள்ள தரவுகளை எடுத்துப் பாருங்கள். உங்கள் (பாஜகவினர்) கண்களை நன்கு திறந்து பாருங்கள். அப்போதுதான் என்னென்ன செய்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியவரும்.
மருந்து, ஐடி, ஐடி அல்லாத துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் தெலங்கானாவிற்கு கிட்டத்தட்ட ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது.
தெலங்கானா இளைஞர்களுக்கு 23 லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பாஜக அறிவார்ந்த முறையில் திவாலாகிவிட்டது. இதனால் தெலங்கானாவில் உண்மையான முன்னேற்றங்களைக அக்கட்சியால் காண முடியவில்லை.
சர்ச்சைக்குரிய 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிய நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மரணத்துக்குக் காரணமான அதே கட்சியைச் சேர்ந்தவர் நீங்கள்தான்.
இப்போது விவசாயிகளின் நலன் பற்றி பேச உங்களுக்கு தைரியம் வந்துவிட்டது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் வழங்கி நாட்டிலேயே தெலங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் 24 மணி நேர இலவச மின்சாரத்தை வழங்குகிறோம்.
கே.சந்திரசேகர் ராவ் ஆட்சியில், தெலங்கானா நாட்டிலேயே விவசாயம் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த உண்மையை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று தெலுங்கானாவில் வேலையின்மை விகிதம் என்ன? பொய்களைப் பரப்புவதையும், உண்மைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதையும் நிறுத்துங்கள். தவறான தகவல்களை பரப்புவது குற்றம் ஆகும் என்றார் தசோஜு சரவண்.
முன்னதாக, தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் வெள்ளிக்கிழமை காமரெட்டியில் உள்ள அட்லூர் யெல்லாரெட்டி கிராமத்தில் இறந்த விவசாயியின் வீட்டிற்குச் சென்று அவரது தற்கொலைக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுமார் 8 கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தொழில்துறை மண்டலத்திற்காக வழங்கப்படுகிறது. மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ, பேசவோ கூட அரசு முன்வரவில்லை. இது இப்போது மட்டும் நடந்ததல்ல. சில ஆண்டுகளாக இங்குள்ள சில தலைவர்கள் திட்டமிட்டு, தங்களுக்கு சாதகமாக மாஸ்டர் பிளானை மாற்றி, தங்கள் நிலங்களின் மதிப்பை உயர்த்தி உள்ளனர். மாஸ்டர் பிளான் அதன் ஒரு பகுதியாகும். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அனைத்து எதிர்ப்புகளையும் அடக்கி, தொழில் மண்டலம் அமைத்திருப்பார்கள்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
டாபிக்ஸ்