தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nmc: தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுள்..வலுக்கும் எதிர்ப்புகள்!

NMC: தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுள்..வலுக்கும் எதிர்ப்புகள்!

Karthikeyan S HT Tamil

Dec 01, 2023, 10:46 AM IST

google News
தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரப்பூர்வ சின்னத்தை மாற்றியமைத்து, 'இந்தியா' என்ற சொல்லுக்கு பதிலாக 'பாரத்' என்றும் ஆயுர்வேத கடவுளான தன்வந்திரியின் வண்ணப் படத்தைச் சேர்த்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்குப் பதிலாக 'பாரதம்' என மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு-வெள்ளையில் இருந்ததாகவும் தற்போது நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுபோல 'பாரதம்' என்ற சொல் இடம்பெற்றதிலும் பெரிய தவறும் ஒன்றும் இல்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றத்தில் ஒரு மதத்தின் சார்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து என்எம்சியின் அதிகாரப்பூர்வ தலைவர் பிஎன் கங்காதர் கூறுகையில், "தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றப்படவில்லை என்பதால் இங்கு பரபரப்பானது எதுவும் இல்லை. தன்வந்திரியின் படம் ஏற்கனவே லோகோவில் இருந்தது. ஆனால், கருப்பு மற்றும் வெள்ளை வரி வரைபட வடிவில் இருந்தது. கருப்பு வெள்ளை படம் அச்சிட முடியாததால் படத்தில் வண்ணம் சேர்க்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்தனர். அதன்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று இடம்பெற்றுள்ளதில் எந்த தவறும் இல்லை. அப்படிச் செய்வதற்குப் பின்னால் வேறு எந்தக் காரணமும் இல்லை." என்றார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை மறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல… மக்களின் உயிரோடு விளையாடுவது." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி