தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  சிறுநீரில் இருந்து பீர்.. புதுமையை புகுத்தும் சிங்கப்பூர் நிறுவனம்!

சிறுநீரில் இருந்து பீர்.. புதுமையை புகுத்தும் சிங்கப்பூர் நிறுவனம்!

Karthikeyan S HT Tamil

May 27, 2022, 10:15 PM IST

google News
சிங்கப்பூரில் கழிவுகளை கொண்டு பீர்களை தயாரிப்பது இது முதல் முறை அல்ல. அந்நாட்டில் இதுபோன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கழிவுகளை கொண்டு பீர்களை தயாரிப்பது இது முதல் முறை அல்ல. அந்நாட்டில் இதுபோன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கழிவுகளை கொண்டு பீர்களை தயாரிப்பது இது முதல் முறை அல்ல. அந்நாட்டில் இதுபோன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், பீர் தயாரிப்பில் புதுமை புகுத்த வேண்டும் என்ற நோக்கில் Newbrew என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது சிங்கப்பூர் நிறுவனம்.

வழக்கமான பீர் போல தோன்றினாலும், இந்த பிரண்டின் பெயர், தோற்றம் மற்றும் ருசியில் புதுமை எதுவும் இல்லை. ஆனால், இதன் தயாரிப்பு முறைதான் சற்று தனித்துவமானது. Newbrew பீர் ஆனது, Newater எனப்படும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நீர் கழிவு மற்றும் சிறுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட உயர் தரம் வாய்ந்த தண்ணீராகும்.

இந்த புதிய பிராண்டின் 95 சதவீத தயாரிப்புகள் இந்த NeWater நீரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இது சர்தேச பாதுகாப்பு தரத்துடன் கூடியதாகவும், பீர் தயாரிப்புக்கு ஏற்ப சுத்தமானதாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பீரில் சுவையான தேன், ஜெர்மன் பார்லி மால்ட், யீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனை பசுமையான பீர் என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் பீர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கழிவுகளை கொண்டு பீர்களை தயாரிப்பது இது முதல் முறை அல்ல. அந்நாட்டில் இதுபோன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீர் தயாரிப்பதற்கு நிறையத் தண்ணீர் தேவைப்படுவதாலும், 90 சதவீத பானத்தில் H20 இருப்பதாலும், அதற்கு மாற்றாக இந்த மறுசுழற்சி முறையை அந்நிறுவனம் கடைப்பிடித்திருக்கிறது.

பொதுவாக சிங்கப்பூரில் நீண்ட காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தும் வழக்கமும் அங்கு நடைமுறையில் உள்ளது.

நீர் மேலாண்மை அந்நாட்டின் அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், மறுசூழற்சி செய்யப்பட்ட நீரைக் கொண்டு அந்நாட்டின் நீர் தேவையை 40 சதவீதம் அரசு பூர்த்தி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை வரும் 2060ஆம் ஆண்டில் 55 சதவீதமாக உயரும் என சிங்கப்பூர் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தண்ணீர் சிங்கனத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் 2030ஆம் ஆண்டுக்குள் தினசரி 140 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி