தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Dengue: ஷாக் கொடுக்கும் டெங்கு..பலி எண்ணிக்கை 185 ஆக உயர்வு - பீதியில் உறையும் மக்கள்!

Dengue: ஷாக் கொடுக்கும் டெங்கு..பலி எண்ணிக்கை 185 ஆக உயர்வு - பீதியில் உறையும் மக்கள்!

Karthikeyan S HT Tamil

Jul 25, 2023, 06:09 PM IST

google News
நடப்பாண்டு மட்டும் வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. (HT PRINT)
நடப்பாண்டு மட்டும் வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு மட்டும் வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. இந்நிலையில், வங்கதேசத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆகவும், பாதிப்பு 35,270-ஐ எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியான நிலையில், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 5,956 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் பாதிப்பு 27,292 ஆகப் பதிவாகியுள்ளன. இதையடுத்து, டாக்காவில் 1,238 பேர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,293 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜனவரி 1 முதல் ஜூலை 24 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 27,622 குணமடைந்துள்ளனர்.

டெங்கு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கதேசத்தில் கொசுக்களின் இனப்பெருக்கத்தை சரிபார்க்கவும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வங்கதேசத்தில் கடந்த 2022-ல் 281 டெங்கு இறப்புகளும், 2019-ல் 179 இறப்புகளும் பதிவாகி இருந்தது. அதேபோன்று கடந்தாண்டு 62,423 பேரில் 61,971 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 20,465 பாதிப்பும், 109 இறப்பும் பதிவானது.

வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று வங்கதேசத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி