தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  2 மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி - மேகாலயா யாருக்கு ?

2 மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி - மேகாலயா யாருக்கு ?

Karthikeyan S HT Tamil

Mar 02, 2023, 12:42 PM IST

google News
Election Results 2023: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது (PTI)
Election Results 2023: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது

Election Results 2023: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) முன்னிலை வகிக்கிறது.

திரிபுரா:

திரிபுரா மாநிலத்தில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 16ந் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திப்ரா கட்சி 9 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

நாகாலாந்து

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டயின்றி வெற்றி பெற்றார். இதையடுத்து 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த கூட்டணி தற்போதைய நிலவரப்படி 36 இடங்களிலும், என்பிஎஃப் கட்சி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதியிலும் முன்னலை வகிக்கின்றன.

மேகாலயா

மேகாலயத்தில் இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி 27 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பாஜக 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி